பொன்னியின் செல்வன் ஹிட்டு தான்! அதுக்குனு இதெல்லாம் கொஞ்சம் ஓவரு! திண்டுக்கல் புத்தக திருவிழா ஷாக்!
திண்டுக்கல் : இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி உள்ள வரலாற்று காவியமான அமரர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் திரைப்படமாக வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் தனியார் பதிப்பகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள 'பொன்னியின் செல்வன்' நாவலின் அட்டை படத்தில் பழைய ஓவியங்களுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராய், திரிஷாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதைக் கண்டு புத்தக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரான மணிரத்னம் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்துள்ளார். நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த படம் வெளிவந்துள்ளது. தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான எம்ஜிஆர், ரஜினி, கமலஹாசன் ஆகியோர் இதற்காக ஏற்கனவே முயன்றுள்ளனர்.
ஆனால் தற்போது இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பொன்னியின் செல்வன்
படம் தற்போது வரை சுமார் 400 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் நடிகர் நடிகைகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் காரணம் நீண்ட காலத்திற்குப் பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படுவது தான் மேலும் படத்தில் திரிஷா ஐஸ்வர்யாராய் ஆகியோரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நல்ல வரவேற்பு
96 படத்திற்கு பிறகு, திரிஷாவுக்கும் எந்திரன் படத்திற்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் படத்தில் பெரிய போட்டியே இருக்கிறது எனலாம். அழகிலும் அறிவிலும் யார் சிறந்தவர் என்ற விவாதமே சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் திரிஷா சேலை, ஐஸ்வர்யாராய் நெக்லஸ் என படத்தில் அவர்கள் அணிந்திருந்த உடைகளுக்கும் நகைகளுக்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்த நிலையில் அதை வைத்து பல நிறுவனங்கள் கல்லா கட்ட ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில் தான் திண்டுக்கல்லிலும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புத்தக கண்காட்சி
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் புத்தகத் திருவிழா திண்டுக்கல் டட்லி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. 120 அரங்குகளில் 5000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு புகழ்பெற்ற பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன. அதில் ஒரு பதிப்பகம் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

திரிஷா - ஐஸ்வர்யா ராய்
பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கு பல ஓவியர்கள் உயிரூட்டி உள்ளனர். கற்பனை கதாபாத்திரமான நந்தினி, உண்மையிலேயே வாழ்ந்த குந்தவை எப்படி இருப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் கற்பனையாக வரைந்த ஓவியங்களை பொன்னியின் செல்வன் நாவலை அழகுபடுத்தி வந்தன. இந்த நிலையில் தனியார் பதிப்பகம் சார்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் நாவலில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இதனைப் பார்த்த புத்தக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லாம் கலிகாலம் எனக் கூறியவாறு அவர்கள் கடந்தும் சென்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications