திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திண்டுக்கல் பக்கம் திடீர் பரபரப்பு.. உதயமானது கொரோனா மாரியம்மன் கோவில்! கூட்டமாக குவிந்த பக்தர்கள்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே மாசாணியம்மன் கோவிலில், கோரோனோ மாரியம்மன் பெயரில், சிலை வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது. பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் முருகானந்தம்-வளர்மதி தம்பதியினர் கடந்த 2013ம் ஆண்டு ஸ்ரீ மாயக்காரி மாசாணியம்மன் என்ற கோவிலை உருவாக்கி, தினந்தோறும் அதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வந்தனர்.

இந்த கோவிலுக்கு அமாவாசை பவுர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களிலும் மற்றும் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்த வண்ணம் இருந்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை கோலாகலம் மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள்சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை கோலாகலம் மகர ஜோதியை தரிசித்த பக்தர்கள்

அம்மன் உத்தரவு

அம்மன் உத்தரவு

அதேபோல் மாதந்தோறும், அமாவாசை, பௌர்ணமி, தேய்பிறை, அஷ்டமி ஆகிய தினங்களில் மதிய அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு அந்த கோயில் நிர்வாக தம்பதியினருக்கு மாசாணி அம்மனின் அருள் வாக்கில், கொரோனோ மாரியம்மன் என்ற பெயரில் சிலை வைத்து வனங்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி தனியாக கொரோனா மாரியம்மன் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

பக்தர்கள் கூட்டம்

பக்தர்கள் கூட்டம்

கொரனோ மாரியம்மனை பல பகுதிகளிலிருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றால் கொரோனோ தொற்று உறுதியாக வராது என்று கோவில் பூசாரி தெரிவிக்கின்றார். அதனால் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

நோய் தொற்று பரவாது

நோய் தொற்று பரவாது

நாட்டையே உலுக்கி வரும் நிலையில் இந்த கொரோனோ தொற்று பரவாமல் இருக்க இங்குள்ள கொரோனோ மாரியம்மனை தரிசனம் செய்தால் நோய் தொற்று பரவாது என்று கோவில் பூசாரி உறுதியளித்து கூறுவது பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் கோவிலில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நிலையில் மற்ற தினங்களில் இந்த கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகியும் பூசாரியும் ஆன முருகானந்தம் தெரிவித்தார்.

பிளேக் மாரியம்மன் கோவில்கள்

ஒரு காலத்தில் பிளேக் நோய் தீவிரமாக பரவியபோது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பிளேக் மாரியம்மன் என்ற பெயரில் கோவில்கள் கட்டப்பட்டன. மாரி என்பது மழை மற்றும் நோய் என்ற பொருள் தரக்கூடியது. எனவே ஏதாவது ஒரு கொடூர நோய் பரவினால் அதை தீர்க்க மாரியம்மன் உதவி செய்வாள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. அப்படித்தான் இப்போது கோவையை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்திலும் கொரோனா மாரியம்மன் என அம்மனுக்கு பெயரிடப்பட்டுள்ளது என்கிறார்கள், சமய ஆய்வாளர்கள்.

English summary
Worship is held at the Maasaaniyamman Temple near Ottansathiram, with a statue named after corono Mariamman. Devotees from many parts come and perform Sami darshan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X