திண்டுக்கல்: மலைக்கோட்டை மாநகரில் மலையேறப் போகும் கூட்டணி கட்சி எது? போராடும் சிபிஎம், எஸ்டிபிஐ!
திண்டுக்கல்: திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிடப்பட்ட தொகுதிதான் திண்டுக்கல். இத்தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்காக போராடுகின்றன.
திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: பழனி,
ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல்.

திண்டுக்கல் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 16,07,051; ஆண்கள்- 7,80,096; பெண்கள்- 8,26,737; 3-ம் பாலினத்தவர் 218.
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்:
என். எஸ். வி. சித்தன்(காங்கிரஸ்) 361,545
பாலசுப்ரமணியம்(அதிமுக) 307,198
முத்துவேல்ராஸ்(தேமுதிக)100,788
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
எம். உதயகுமார்( அதிமுக) 5,10,462
எஸ். காந்திராஜன்(திமுக) 3,82,617
கிருஷ்ணமூர்த்தி(தேமுதிக) 93,794
சித்தன் காங்கிரஸ்(35,632)
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ப. வேலுச்சாமி(திமுக) 7,46,523
ஜோதிமுத்து(பாமக) 2,07,551
ஜோதி முருகன்(அமமுக) 62,875
மன்சூர் அலி கான்(நாம் தமிழர் கட்சி) 54,957
சுதாகரன்(மக்கள் நீதி மய்யம்) 38,784
2024-ல் களம் காணும் வேட்பாளர்கள்
சச்சிதானந்தன் (மார்க்சிஸ்ட்)
நெல்லை முபாரக்( எஸ்டிபிஐ- அதிமுக)
திலகபாமா(பாமக)
கைலைராஜன் துரைராஜன்( நாம் தமிழர் கட்சி)
திண்டுக்கல் கள நிலவரம் என்ன?: திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் அதிமுக 7 முறை வென்றுள்ளது. திமுக 3 முறை இத்தொகுதியைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 2 முறை வென்றுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதி. நாம் தமிழர் கட்சியும் வாக்கு வங்கியை உருவாக்க முயற்சிக்கிறது. திண்டுக்கல்- சபரிமலை ரயில் திட்டம், திண்டுக்கல் -காரைக்குடி ரயில் திட்டம் நீண்டகால கோரிக்கை. திண்டுக்கல் பேருந்து நிலையமும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையடைய வேண்டும் என்பதும் கிடப்பில் கிடக்கும் கோரிக்கைகள் கொடைக்கானலைப் போல சிறுமலையை சுற்றுலாத்தலமாக்க வேண்டும்; பழனியை ஆன்மீக சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பு. கொடைக்கானல் சுற்றுலா தலமாக இருந்தாலும் கண்டு கொள்ளப்படாத மாற்றாந்தாய் பிள்ளையாக இருக்கிறது என்பது வேதனை. திண்டுக்கல் பூட்டு மற்றும் தோல் தொழிலுக்கு புகழ் பெற்ற நகரம். திண்டுக்கல்லின் அடையாளமான இந்த இரு தொழில்களும் நசிந்து நாசமாகிக் கிடப்பதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்பதும் எதிர்பார்ப்பு. திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் திமுக- அதிமுக இரு கட்சிகளுமே போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கே கொடுத்துவிட்டன. பாஜக அணியிலும் பாமகவுக்கு கொடுத்துவிட்டது. இதனால் திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் தேர்தல் பிரசாரம் எதிர்பார்த்த பரபரப்பு இல்லைதான். ஆனாலும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் திமுக- அதிமுக கூட்டணி கட்சிகள் போராடுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications