தலைவா ’துணிவு’ அப்டேட் கொடுங்க.. கத்திக் கேட்ட ரசிகர்கள்! சட்டென திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் 'தலைவா துணிவு அப்டேட் கொடுங்க' என கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் அஜித் நடித்த திரைப்படம் துணிவு படமும் , நடிகர் விஜய் நடித்த திரைப்படம் வாரிசு படமும் பொங்கல் அன்று ஒரே நாளில் வெளியாக உள்ளது. தற்போதே இரு பெரும் நடிகர்களின் ரசிகர்கள் தங்கள் நாயகர்களை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
துணிவு இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் 3 வது படமாகும் இதே கூட்டணியில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' திரைப்படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

துணிவு
போனி கபூர் தயாரித்துள்ள துணிவு படத்தில் நடிகர் ஏகேவுடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள நிலையில், இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கும் நிலையில், நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் இப்படம் வெளியாகியிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் மோத இருப்பதால் தற்போதிருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

பலத்த வரவேற்பு
துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள சில்லா சில்லா, காசேதான் கடவுளடா பாடல்களும் வெளியாக பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மில்லியன் கணக்கில் பார்த்துள்ள நிலையில் படத்தின் மூன்றாவது சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். அவ்வப்போது படக்குழு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பல அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

புதிய அப்டேட்
மேலும் நடிகர் அஜித்தின் புகைப்படங்களை அவரே சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி வரும் நிலையில் தற்போது புதிய அப்டேட்டாக ஜிப்ரான் இசையில் துணிவு படத்தின் 3வது சிங்கிளான 'கேங்ஸ்டா' வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. புதிதாக பாடலின் வரிகளையும் படக்குழு வெளியிட்டுள்ளது. "சீண்டுனா சிரிப்பவன்.. சுயவழி நடப்பவன்.. சரித்திரம் படைப்பவன்.. He's Like A Gangsta, He's A Gangsta.. பகைவனுக்கு இரக்கப்பட்டு பணிஞ்சுபோற துணிவுகொண்டு பயணம் செய்யும் குணம் கொண்டவன் He's Like A Gangsta, He's A Gangsta" என்ற வரிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளவரான உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் 'தலைவா துணிவு அப்டேட் கொடுங்க' என கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தின் கடைசி நிகழ்ச்சியாக நத்தம் பஸ்நிலையம் முன்பாக திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றிவைத்தார். கொடியை ஏற்றி வைத்துவிட்டு உதயநிதி ஸ்டாலின் காருக்கு திரும்பும் போது அங்கிருந்த அஜித் ரசிகர்கள் 'தலைவா தலைவா துணிவு அப்டேட் கொடுங்கள்' என கத்திய காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications