கார் ஓட்டுனவரு ஹெல்மெட் போடலை? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்! கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்?
திண்டுக்கல் :- உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபீஸர் என்பதுபோல திண்டுக்கல்லில் கார் ஓட்டியவர் மற்றும் காரின் பின்னே அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் போடவில்லை என 200 ரூபாய் அபராதம் விதித்த திண்டுக்கல் காவல்துறையின் செயல் சமூக வலைதளங்களில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவிலான சாலை விபத்துகள் நடப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருந்தது.
இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!
சராசரியாக ஒரு நாளைக்கு 300 முதல் 400 சாலை விபத்துகள் பதிவாகும் நிலையில், 10 முதல் 12 பேர் சாலைகளில் தங்கள் உயிரை விடும் அவல நிலை நீடிக்கிறது.

தமிழக காவல்துறை
இதன் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாள்தோறும் முக்கிய சாலை சந்திப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு எனப்படும் உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது.

போக்குவரத்து விதிமீறல்
பின்னர் உரிய அபராதத் தொகையை செலுத்தி வாகனத்தை நாம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். போக்குவரத்து அலுவலர்கள் மட்டுமல்லாது டிராபிக் போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்தி வருகின்றனர். இதில் பல நேரங்களில் பல்வேறு சிக்கல்களும் முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்துள்ளது.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
அந்த வகையில்தான் உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா ஆபீஸர் என்பதுபோல காரில் பயணம் செய்த ஓட்டுனர் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என கூறி 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது திண்டுக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனது சொந்த பயன்பாட்டுக்காக மாருதி ஆல்டோ காரை 5 வருடமாக பயன்படுத்தி வருகிறார்.

காருக்கு ஹெல்மெட்
வாகனத்தின் பைனான்ஸ் முடிவடைந்த நிலையில் தனது பெயருக்கு மாற்றுவதற்காக திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கார்த்திகேயன் சென்ற போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது கடந்த 24 ஆம் தேதி கார்த்திகேயன் விதிமீறல் ஈடுபட்டதாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பெயரில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் காரில் பயணம் செய்த கார்த்திகேயன் மற்றும் அவரது பின்னால் அமர்ந்து இருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதுதான்.

அபராதம் விதிப்பு
காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் தான் அணிய வேண்டும் என்ற விதி இல்லை இருக்கும் நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை போக்குவரத்து காவல்துறையினர் தான் அபராதம் இருப்பார்கள் எனக் கூறினார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் புகார் அளித்தும் எந்த பதிலும் கிடைக்காததால் வேறு இன்றி அபராதத் தொகையைக் கட்டி வீடு திரும்பியிருக்கிறார் கார்த்திகேயன்.

பொதுமக்கள் கோரிக்கை
போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டியது காவல்துறையின் கடமை தான் அதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக காரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து தான் செல்ல வேண்டும் எனக் கூறி அபராதம் விதித்து இருப்பது என்ன வகை நியாயம் என கேள்வி எழுப்பும் பொதுமக்கள் போலீசாரின் இந்த செயலை கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.