திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புக்கு ஏது சார் விலை.. தத்ரூபமாக உருவாக்கப்பட்ட தாய்மாமன் சிலை.. மடியில் அமரவைத்து காதணி விழா..!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், தத்ரூபமாக அவரது சிலையை உருவாக்கி சிலையின் மடியில் சாகோதரியின் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

Recommended Video

    அன்புக்கு ஏது சார் விலை.. தத்ரூபமாக உருவாக்கப்பட்ட தாய்மாமன் சிலை.. மடியில் அமரவைத்து காதணி விழா..!

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி. பசுங்கிளி. தம்பதியின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து போனார் அப்போது அவருக்கு வயது 21.

    அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெற்றது.

    செந்தில்பாலாஜிக்காக எழுந்து தள்ளி அமர்ந்த துரைமுருகன்! தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல மண விழா ருசிகரம்!செந்தில்பாலாஜிக்காக எழுந்து தள்ளி அமர்ந்த துரைமுருகன்! தமிழச்சி தங்கபாண்டியன் இல்ல மண விழா ருசிகரம்!

    சாலை விபத்து

    சாலை விபத்து

    பாண்டித்துரை இளம் வயதிலேயே இறந்து போனதால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது. இதற்கு முன்னதாக தாய்மாமன் சிலிக்கன் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது.

    சிலிக்கான் சிலை

    சிலிக்கான் சிலை

    அதன்பின் சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடைபெற்றது. இதுபற்றி பாண்டித்துரையின் தாய் பசுங்கிளி கூறும்போது அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் கனவு ஆகும் இதனை அடிக்கடி கூறி வந்தார் இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்து ஒன்றில் இறந்து போனார்.

    தத்துரூபமாக உருவம்

    தத்துரூபமாக உருவம்

    இதில் பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் பாண்டித்துரையின் அச்சு அசல் உருவம் போலவே தத்துரூபமாக இருக்கும்படி சிலை செய்யச்சொல்லி இங்கு கொண்டு வந்தோம் இதன்மூலம் என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது பேரக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது என் மகளின் ஆசையும் நிறைவேறியது என்றார்.

    பெரும் வரவேற்பு

    பெரும் வரவேற்பு

    மேலும் இந்த சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் செலவானது என்றும் கூறினார். ஒட்டன்சத்திரத்தில் இதுபோன்ற வினோதமான முறையில் சிலையில் அமரவைத்து குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    English summary
    The incident in which a young man was killed in an accident in Ottanchattaram, Dindigul district, has created a realism by making his own statue and holding an earring ceremony with children seated on the lap of the statue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X