பழனியில் வேல் சிலை உடைப்பு.. மர்மநபருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்...!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி குளத்து ரவுண்டானாவில் உள்ள வேல் சிலையை உடைத்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில் , வேல் உடைக்கப்பட்டதை அடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
குறிப்பாக தைப்ப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்காலங்களிலும், பக்தர்கள் கூட்டம் ஆயிரம் மடங்கு அதிகரித்துக்காணப்படும். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பழனியிலும் மலைக் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம்ம் அதிகரித்துள்ளது. நகரின் பல்வேறு இடங்களில் வாகன நெருக்கத்துடன் காணப்படுகிறது.

பழனியில் வேல்சிலை
வருகை தரும் பக்தர்களை கவரும் வகையில், பழனி கோவில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதியில் செப்ஃபி பாய்ண்டும், பழனி பேருந்துநிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் பளிங்கு கற்களால் ஆன வேல் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. இதற்கு தினமும் பக்தர்கள் மாலை அணிவிப்பர். மேலும் பழனியின் அடையாளமாகவும் இது விளங்குகிறது.

வேல் சிலையை உடைத்த மர்மநபர்
இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் திடீரென வேல் ரவுண்டானா மீது ஏறி அதில் உள்ள வேல் சிலையை தாக்கி உடைத்தார். இதனால் அது கீழை சாய்ந்து இரண்டாக உடைந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் உடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர போலீசார் விரைந்து வந்து சிலையை உடைத்த நபரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்து அமைப்பினர் போரட்டம்
இதற்கிடையே வேல் சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் சிலையை உடைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சிலையை நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை வைக்க போலீசார் உறுதி
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி சத்தியராஜ் பேச்சுவார்த்தை நடத்தி 24மணி நேரத்தில் மீண்டும் வேல் சிலையை வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்தொடர்ந்து போலீசார், சிலையை உடைத்த நபர் மனநலம் பாதித்தவரா, அல்லது போதை நபரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications