திமுகவை விடாத “செருப்பு” பஞ்சாயத்து! அன்று பிடிஆர்.. இன்று ஆ.ராசா - கொடைக்கானலில் பரபரப்பு
திண்டுக்கல்: திமுக எம்பி ஆ.ராசா இந்து மதம் பற்றி பேசியதாக கூறி கொடைக்கானலில் அவரது உருவ படத்திற்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பியும் முன்னா மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசிய கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆ.ராசா தன்னுடைய உரையில், "கிறிஸ்துவராகவோ இஸ்லாமியராகவோ பெர்சியராகவோ இல்லாவிட்டால் நீ இந்துதான் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.

ஆ.ராசா பேச்சு
சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்.

தனித் தமிழ்நாடு
விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாட்டுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம் என ராசா பேசும் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

அண்ணாமலை
இந்த வீடியோ பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, "தமிழ்நாட்டில் அரசியல் பேச்சுகள் இந்த நிலையில் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. யாரையோ திருப்திப்படுத்துவதற்காக திமுக எம்பி மீண்டும் ஒரு சமூகத்தினர் மீது வெறுப்புணர்வை கக்கியுள்ளார்.

செருப்பு மாலை
இந்த நிலையில் ஆ.ராசா மீது பாஜக சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் திமுக எம்பி ஆ.ராசா உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து சிலர் அவமரியாதை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸ் விசாரணை
தகவலறிந்து அங்கு சென்ற கொடைக்கானல் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஆனால் அங்கு ஆ.ராசா உருவ படம் இல்லை. இதனையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு அதன் அடிப்படையில் விசாரணையில் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications