திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..! கொலையாளிகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் எச்சரிக்கை! பரபர திண்டுக்கல்..!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட நபரின் நினைவஞ்சலி போஸ்டரில் கொளையாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Recommended Video

    திண்டுக்கல்: பரபரப்பை ஏற்படுத்திய நினைவஞ்சலி போஸ்டர்: கொலையாளிகளுக்கு எச்சரிக்கை!

    திண்டுக்கல் மாவட்ட பழனி அடிவாரம் அருகேயுள்ள மருத்துவ நகரை சேர்ந்தவர் சின்னகன்னு. இவருடைய மகன் மண்டையன் என்ற சங்கர் . இவர் கடந்த மூன்றை ஆண்டுகளுக்கு முன்பு ஆயக்குடி அருகே உள்ள அமரபூண்டியில் ஒரு வீட்டில் குடியேறினார்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் வீட்டில் தந்தை, தாய் ஆகியோருடன் சங்கர் இருந்தபோது இரவு 9.30 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

    கார் ஓட்டுனவரு ஹெல்மெட் போடலை? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்! கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்? கார் ஓட்டுனவரு ஹெல்மெட் போடலை? பைன் போட்ட திண்டுக்கல் போலீஸ்! கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்?

    கொடூர கொலை

    கொடூர கொலை

    அந்த நேரத்தில் சங்கர் வீட்டிற்கு காரில் ஒரு கும்பல் வந்தது. பின்னர் 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து சங்கரை தூக்கி சென்றது. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் வீட்டின் வெளியே சங்கரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இது குறித்து தகவலறிந்த ஆயக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு வெட்டி கொலை செய்யப்பட்ட சங்கரின் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலையால் முன்விரோதம்

    கொலையால் முன்விரோதம்

    இந்த நிலையில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் கொலை நடந்த இடத்துக்கு வந்தார். பின்னர் அவர் விசாரணையை முடுக்கி விட்டார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2017-ம் ஆண்டு பாலசமுத்திரம் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையை சங்கர் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் செய்தது. இந்த கொலை வழக்கில் சங்கர் சிறையில் இருந்தார்.

    கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

    கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

    அந்த கொலைக்கு பழிக்கும் பழியாகத்தான் சங்கர் கொலை செய்யப்பட்ட ந்லையில், சங்கர் கொலை வழக்கில் தொடர்புடைய பழனி அடிவாரம் பகுதியைச் சார்ந்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர்களில் சிலர் ஜாமினில் வெளிவந்துள்ளனர். இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் சங்கரின் ஆதரவாளர்கள் பழனி மலை அடிவாரத்தில் பல இடங்களில் நினைவு அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

    கொலையாளிகளுக்கு எச்சரிக்கை

    கொலையாளிகளுக்கு எச்சரிக்கை

    அதில் சங்கர் சூழ்ச்சியால் வீழ்த்த பட்டதாகவும், கொலை செய்தவர்கள் யாரும் வாழ மாட்டார்கள் என்று கொலையாளிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே அடிவாரம் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்தவர்களில் சங்கர் இடம் பெற்றிருந்ததால் பழிக்குப்பழியாக சங்கர் கொலை செய்யப்பட்டார்.

    போலீசார் விசாரணை

    போலீசார் விசாரணை

    இந்த நிலையில் வேண்டும் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்தும் வகையில் வாசகங்களை சங்கரின் ஆதரவாளர்கள் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளதால் பழனி அடிவாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டிய நபர் யார் என்பது குறித்து மலையடிவார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடிவாரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Police are investigating an incident in Palani, Dindigul district, in which a warning was given to the killers on a memorial poster of the person who was killed three years ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X