வேலையை ஆரம்பிக்கும் நேரத்திலா இப்படி.. தர்ம சங்கடத்தில் 'மென்டர்' தோனி.. ஹர்திக் பாண்ட்யாதான் காரணம்
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் மென்டராக பதவியேற்கும் தோனிக்கு ஆரம்பத்திலேயே தர்ம சங்கடம் காத்துள்ளது. இதற்கு காரணம், ஹர்திக் பாண்டியா.
பாண்ட்யாவை டி20க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்ப்பதா இல்லையா என்பதில் மொத்த நிர்வாகமும் குழம்பிப் போயுள்ளது. எனவே இதில் இறுதி முடிவு எடுக்க தோனியின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
டி20 உலக கோப்பையில் ஆட உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இப்போது அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடிவருகிறார். எனவே பிசிசிஐ பணிகளை எடுக்க முடியவில்லை.

தோனிக்காக வெயிட்டிங்
இருப்பினும் ஏற்கனவே சில பிசிசிஐ நிர்வாகிகள் தோனியை ஹோட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றனர். முழு வீச்சில் இதில் தோனி களமிறங்கப்போவது ஐபிஎல் சீசன் முடிந்த பிறகுதான். ஆனால் அவர் வந்துதான் ஒரு பஞ்சாயத்தை தீர்த்து வைக்க வேண்டிய தேவையுள்ளதால் பிசிசிஐ நிர்வாகிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலக கோப்பை
அதாவது, உலக கோப்பை அணியில் ஹர்திக் பாண்டியாவை வைத்திருப்பதா வேண்டாமா என்பதுதான் அந்த முக்கிய விஷயம். மேலும் வருண் சக்கரவர்த்தி ஃபிட்னஸ் இல்லாத நிலையில், அவருக்கு பதில் யாரை சேர்ப்பது என்ற தயக்கமும் இருக்கிறது.

வேகப் பந்து ஆல் ரவுண்டர்
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஹர்திக் பாண்டியாவை மாதிரி கடந்த 10 ஆண்டுகளில் வேறு எந்த வேகப்பந்து ஆல் ரவுண்டரும் உருவாகவில்லை. ஆனால், கடந்த இரு வருடங்களில் மிக குறைவான ஓவர்கள்தான் அவர் பந்து வீசியுள்ளார். முதுகு பிரச்சினை காரணமாக, ஹர்திக் பாண்டியா அதிகம் பந்து வீச முடியவில்லை.
Recommended Video

ஆல் ரவுண்டராக இல்லையே
ஐபிஎல் சீசனிலும் அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. எனவே ஆல் ரவுண்டர் என்ற கேட்டகிரியில் அவரை சேர்க்க முடியாது. ஏற்கனவே அந்த இடத்தில் ரவீந்திர ஜடேஜா உள்ளார். பினிஷர் என்ற இடத்திற்கு ஹர்திக் பாண்டியாவை வைத்துக் கொள்வதா அல்லது வேறு ஒரு ஆல்ரவுண்டர் போதுமா என்பதெல்லாம் குழப்பங்களுக்கு காரணம். இதில் தோனி கருத்து முக்கியம். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தோனிக்காக காத்திருப்பு
ஏனெனில், ஹர்திக் பாண்ட்யா அணிக்கு வந்தது முதல் அவரை நெருக்கத்தில் பார்த்து வந்தவர் தோனி. அவருக்குதான் ஹர்திக் பாண்டியாவின் திறமை பற்றி நன்கு தெரியும் என்கிறது பிசிசிஐ வட்டாரம். வருண் சக்கரவர்த்தியால் ஆட முடியாவிட்டால் அவருக்கு பதில் யார் என்ற கேள்விக்கான விடையையும் தோனி கூறிய பிறகுதான் பார்க்க வேண்டும் என்று காத்திருக்கிறது பிசிசிஐ நிர்வாகம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications