புர்ஜ் கலீபாவில் லேசர் ஷோ ஒளிபரப்ப எவ்வளவு கட்டணம்?.. சொந்த காசில் ஒளிபரப்பியவர்கள் யார் யார்?
துபாய்: உலகின் உயரமான கட்டடத்தில் கீழடி, பொருநை நாகரிகம் பற்றிய வீடியோ காட்சிகள் முதல்வர் ஸ்டாலினின் வருகையின் போது ஒளிபரப்பப்பட்டன.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். அங்கு சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை திறந்து வைத்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்கள், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

துபாயின் உயரமான கட்டடம்
துபாயில் உலகின் மிக உயரமான கட்டடமாக புர்ஜ் கலீபா உள்ளது. இங்கு உலகின் முக்கிய நிகழ்வுகளும் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள் வரும் போது அவரவர் நாடுகளின் சிறப்புகள் அடங்கிய காட்சிகள் ஒளிபரப்புவது வாடிக்கை. இந்திய சுதந்திர தினம், குடியரசு தினத்தின் போது புர்ஜ் கலீபா கட்டடத்தில் இந்திய தேசியக் கொடி ஒளிர்ந்தது.

முதல்வர் ஸ்டாலின்
அது போல் முதல்வர ஸ்டாலின் துபாய் சென்றுள்ளதால் புர்ஜ் கலீபா கட்டடத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியான கீழடி, பொருநை ஆற்றங்கரை நாகரிகங்களின் சிறப்பை விளக்கும் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனால் உலக தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஸ்டாலின் ட்வீட்
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டில் "புர்ஜ் கலீபாவில் ஒளிபரப்பப்பட்ட கீழடி, பொருநை நாகரிக காட்சிகளை உலக மக்கள் அனைவரும் கண்டு வியந்தனர். இந்திய வரலாற்றை தெற்கில் இருந்து எழுதுவோம் என குறிப்பிட்டிருந்தார். இந்த புர்ஜ் கலீபா கட்டடத்தில் இதுவரை என்னென்ன ஒளிபரப்பாகியுள்ளது தெரியுமா?

உலகத் தலைவர்கள்
உலக தலைவர்கள், அமைச்சர்கள் வந்தால் ஐக்கிய அரபு அமீரக அரசே அந்தந்த நாடுகளின் சிறப்பை விளக்கி அவர்களை கவுரவப்படுத்தும். இதே தனிநபர்கள் இந்த கட்டடத்தில் ஏதேனும் ஒளிபரப்ப வேண்டுமானால் இந்திய மதிப்பில் 50 லட்சம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் 3 நிமிடங்களுக்கு அவர்கள் கேட்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும்.

ஷாரூக் கான்
இந்த கட்டணத்தை செலுத்தி இந்தி நடிகர் ஷாரூக் கான் தனது பிறந்த நாளுக்கு லேசர் ஷோ ஒளிபரப்பச் செய்தார். அது போல் நடிகர்கள் ரன்வீர் கபூர், தீபிகா, துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் இந்த புர்ஜ் கலீபா கட்டடத்தில் லேசர் ஷோக்களை ஒளிபரப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications