துபாய் சுட்டெரிக்கும் வெயில்.. தொழிலாளர்களின் தாகம் தீர்த்த 'கூலிங் ஹார்ட்ஸ்' நெகிழ்ச்சி முயற்சி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயின் சுட்டெரிக்கும் கடும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் அயராது உழைக்கும் தொழிலாளர்களின் நலன் காக்கும் நோக்கில், 'கிரீன் குளோப்' அமைப்பு முன்னெடுத்த "கூலிங் ஹார்ட்ஸ் - இதயங்களை குளிர்வித்தல்" எனும் மனிதநேய களப்பணி துபாயில் சிறப்பாக நடைபெற்றது.

Dubai Heat Relief

இவ்வருடத்தின் நான்காம் கட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வு, துபாயில் உள்ள AG நிறுவனத்தின் கட்டுமான வளாகத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இப்பணியில், சுட்டெரிக்கும் வெப்பத்தில் உழைக்கும் சுமார் 500 தொழிலாளர்களுக்கு நேரடி நிவாரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

Dubai Heat Relief

உடல் உஷ்ணத்தைத் தணித்து உடனடி ஆற்றல் அளிக்கும் வகையில் குடிநீர், பழச்சாறு, லபான் (மோர்), பிஸ்கட், நட்ஸ் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த புத்தம் புதிய பழங்கள் அடங்கிய தொகுப்புகள் தொழிலாளர்களுக்குக் கையளிக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்கள் கடும் உழைப்பில் தாகத்தோடு இருந்த தொழிலாளர்களுக்கு பெரும் புத்துணர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தது.

Dubai Heat Relief

இந்நிகழ்வினை கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான ரஸூல், தாஹிர், சாபீர் மற்றும் தன்னார்வளர்கள் ஒன்றிணைந்து செவ்வனே ஒருங்கிணைத்தனர். மனிதநேயத்தை முன்னிறுத்தி தொழிலாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பேராதரவு தந்து களப்பணியாற்றிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Dubai Heat Relief
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+