இன்ஸ்டா போஸ்டில் கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசிக்கு நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
துபாய்: அமெரிக்க ராப் இசை பாடகர் பிரெஞ்ச் மொண்டனாவிற்கும் துபாய் இளவரசி ஷேகா மஹ்ராவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இன்ஸ்டா பதிவில் கணவரை விவகாரத்து செய்த ஷேகா மஹ்ரா, கடந்த சில மாதங்களாக மொண்டானாவுடன் பொது வெளிகளில் தென்பட்ட நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். திருமணம் தேதி எப்போது என்று அறிவிக்கவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் துபாய் ஆட்சியாளருமான முகம்மது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஹைஃபா மஹ்ரா. 31 வயதான இவருக்கும் ஷேக் மனா பின் முகம்மது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த 2023 ஆண்டு திருமணம் நடைபெற்றது.

உங்களை விவாகரத்து செய்கிறேன்
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஆண்டு திடீரென தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து செய்தியை அறிவித்திருந்தார். குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் கணவருடன் விவாகரத்து பெறுவதாக அறிவித்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது.
தனது இன்ஸ்டா பதிவில், ஹைஃபா மஹ்ரா வெளியிட்டிருந்த பதிவில், "நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால் உங்களை விவாகரத்து செய்கிறேன். உங்களின் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி" என்று பதிவிட்டிருந்தார்.
ராப் இசை பாடகருடன் ஜோடி
விவாகரத்துக்கு பிறகு, தனது தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வந்த ஹைஃபா மஹ்ரா கடந்த சில மாதங்களாக அமெரிக்காவை சேர்ந்த ராப் இசை பாடகருடன் ஜோடியாக வலம் வந்தார். அப்போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில், தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே பிரெஞ்ச் மொன்டானாவுடன் அவர் உறவில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள்
கரீம் கார்பூச் என்ற இயற்பெயர் கொண்ட பிரெஞ்ச் மொன்டானா, மொராக்கோ-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர். மொராக்கோவில் பிறந்து வளர்ந்த இவர், 13 வயதில் தனது குடும்பத்துடன் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார், மேலும் 2000 ஆம் ஆண்டில் யங் பிரெஞ்ச் என்ற பெயரில் ராப் இசை பாடகராக தனது கரியரை தொடங்கியவர். ராப் இசை உலகில் தனக்கென தனி பெயரையும் புகழையும் பெற்றார்.
கடந்த ஆண்டிலிருந்தே இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இருவரும் ஒன்றாக உணவகங்களுக்கு செல்வது, மசூதிக்கு செல்வது, பாரிஸ் நகர வீதிகளில் சுற்றி வருவது என அவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்தன.
இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது
குறிப்பாக பாரிசில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கைகோர்த்தபடி கலந்து கொண்டனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலிப்பதாக வலைத்தளங்களில் பேச்சு எழுந்தது. இந்த நிலையில், இருவரும் தற்போது தங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர். அதாவது துபாய் இளவரசியும் ராப் இசை பாடகரும் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
ஷேகா மஹ்ரா இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் குறித்த தலைப்பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் முகமது பின் ரஷீத் அரசாங்க நிர்வாகத்தில் கல்லூரிப் பட்டமும் இவர் பெற்று இருக்கிறார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications