இந்திய அணிக்கு விடிவு காலம்? முதல் முறையாக நடக்கப்போகும் 'அந்த சம்பவம்..' உறுதி செய்த ஆப்கன் வீரர்
துபாய்: முதலில் பேட்டிங் செய்து சிறப்பான ஸ்கோரை எடுத்தால் இந்தியாவை வீழ்த்த முடியும் என ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹமீத் ஹசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டாஸ் வென்றால், ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும் என்பதை இவரது பேட்டி உறுதி செய்துள்ளது.
இந்தியா டாஸ் வென்றாலும் முதலில் பந்து வீச்சைதான் தேர்வு செய்யும் என்பதால், முதல் முறையாக இன்றைய போட்டியில் இந்தியா செகண்ட் பேட்டிங் செய்ய உள்ளது.
வீட்டுக்காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் செய்த செயல்.. வேதனையடைந்த நீதிபதி.. அதிரடி உத்தரவு!

டாஸ் வெல்வது முக்கியம்
நடப்பு டி20 உலகக் கோப்பையில் இதுவரை நடந்த 19 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 5 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கு டாஸ் வென்ற பெரும்பாலான அணிகள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றன. இந்நிலையில் ஹமீத் ஹாசனின் இந்த கருத்து இந்தியாவிற்கு முக்கியமானதாகும்.

ஆப்கானிஸ்தான் வியூகம்
இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்து 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே அணி இதுதான். பவர் பிளேயில் முழுக்க ஸ்பின்னர்களை பயன்படுத்துவதும் இந்த அணிதான். 2016ம் ஆண்டுக்கு பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக எந்த அணியாலும் 160 ரன்களுக்கு மேல் இலக்கை விரட்டி எட்ட முடிந்தது இல்லை. இதற்கு காரணம், அந்த அணியிலுள்ள அருமையான சுழற் பந்து வீச்சாளர்கள்தான். ரஷீத், முகமது நபி போன்ற ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள்.

பாகிஸ்தான் திணறல்
ஹமீத் ஹசனின் கருத்துப்படி, டாஸ் வென்றால், ஆப்கானிஸ்தான் பேட்டிங்கையே தேர்ந்தெடுக்கப் போகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக கூட அந்த அணி டாஸ் வென்று பேட்டிங்தான் செய்தது. 19வது ஓவர் வரை பாகிஸ்தான் வெற்றி பெறுவது கேள்விக்குறியதாகவே இருந்தது. ஆசிப் அலி ஒரே ஓவரில் அடித்த 4 சிக்சர்தான் பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தது. இத்தனைக்கும் அவர் சிக்சர் அடித்தது வேகப் பந்து வீச்சாளருக்கு எதிராகத்தான். நல்ல பார்மில் இருந்த பாபர் கூட, ரஷீத் பந்தை அடிக்க முற்பட்டு எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின்னர்கள் உள்ளார்கள்
ஹமீத் ஹசன் கூறுகையில், 'இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. ஸ்கோர்போர்டில் நல்ல ஸ்கோரை எடுத்தால், பின்னர் எங்கள் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கின் பலத்தில் டீம் இந்தியாவை வீழ்த்த முடியும். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் ஆப்கானிஸ்தான் அணியில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகில் சிறந்த ஸ்பின்னர்கள் எங்களிடம் உள்ளனர். எங்கள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து ரன்களை குவித்து வருகின்றனர். எங்கள் அணி சரியான அணி. ஆப்கானிஸ்தான் இதுவரை எந்த போட்டியிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கவில்லை என்பது சிறந்த விஷயமாகும். எதிரணிகள் அதிகபட்சமாக, 5 அல்லது 6 பேட்ஸ்மேன்களை மட்டுமே அவுட் செய்ய முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியா செகண்ட் பேட்டிங்
இந்திய அணி இரண்டாவது பேட் செய்யவே விரும்பும். ஆப்கனும் அதையே விரும்புகிறது. எனவே முதல் முறையாக, இந்திய அணிக்கு ஒரு நல்ல வாய்ப்பு வாய்த்துள்ளது. ட்யூ பற்றி கவலைப்படாமல் இந்திய பவுலர்கள் பந்து வீச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.