WFH-க்கு நோ சொன்ன சிஇஓ! துபாயில் இந்திய வம்சாவளி கற்ற பாடம்! இப்படி நடந்திருக்க கூடாது!
துபாய்: கொரோனா தொற்றுக்கு பிறகும், ஏஐ வந்த பிறகும் வேலை செய்யும் முறைகள் மாறியிருக்கின்றன. பல இடங்களில் வொர்க் பிரம் ஹோம் முறை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், துபாயில் தனது ஊழியர் WFH பணி கேட்டதற்கு, இந்திய வம்சாவளி சிஇஓ மறுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் பாடம் கற்றுக்கொண்டதாக கூறியிருக்கிறார்.
வேலையில் பிளேக்சிபிலிட்டி என்பது ரொம்பவும் முக்கியம். என்னதான் ஏஐ வந்திருந்தாலும், இன்னமும் மனிதர்கள்தான் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். முழு கண்ட்ரோலையும் மெஷின்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அப்படி இருக்கையில், ஊழியர்களை வேலை வாங்குவது என்பது மெஷின்களை இயக்குவதை போல இருக்கக்கூடாது.

இந்திய வம்சாவளி சிஇஓ
வேலை செய்வது மட்டும் கிடையாது, வேலை வாங்குவதும் கூட ஒரு கலைதான். பல நிறுவனங்கள் உண்மையான ஊழியர்களை இழக்க காரணம், நிர்வாக தலைமையின் கரடு முரடான போக்குதான். அப்படித்தான் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முனைவர் மாலிக் என்பவர், தனது நிறுவனத்தில் விசுவாசமான ஊழியரை இழந்த சம்பவத்தையும், அதன் மூலம் தான் பெற்ற பாடம் குறித்தும் லிங்க்ட்இன் தளத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
WFH பஞ்சாயத்து
விரிச்சுவர்பார்ட்னர் எனும் நிறுவனத்தின் இணை நிறுவனராக இவர் இருக்கிறார். இவருக்கு, பெண் ஊழியர் ஒருவரிடமிருந்து கோரிக்கை ஒன்று வந்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மட்டும் வொர்க் பிரம் ஹோம் வேண்டும் என்று அந்த ஊழியர் கேட்டிருக்கிறார். அவரது பணியை மேற்பார்வை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது டீம் வொர்க்கும் கிடையாது. எனவே, WFH வழங்கினால் வேலை பாதிக்கப்படாது. இருப்பினும் மாலிக் WFH கொடுக்க மறுத்துள்ளார்.
ஒருவருக்கு அனுமதி கொடுத்தால், அடுத்தடுத்து அனைவரும் அனுமதி கேட்பார்கள். இதன் காரணமாக அலுவலத்தின் கண்ட்ரோல் கையை விட்டு போய்விடும் என்று மாலிக் பயந்திருக்கிறார்.
ராஜினாமா செய்த ஊழியர்
இந்த காரணத்தால் அவர் WFH கொடுக்க மறுத்துவிட்டார். இதற்காக அந்த ஊழியர் சண்டை போடவில்லை. ஆனால், 2 மாதங்கள் கழித்து அந்த ஊழியர் ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். இதற்கு அவர் சொன்ன காரணங்கள், தனது மேலாளர் தன் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதுதான். ஏனெனில், அவர் அலுவலகம் வர குறைந்தது 4 மணி நேரம் தினமும் டிராவல் செய்ய வேண்டும். குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் டிராபிக் அதிகம் இருக்கும்.
இந்த காரணத்தினால்தான் அவர் WFH கேட்டிருக்கிறார். ஆனால், அனுமதி கிடைக்காததால் ராஜினாமா செய்திருக்கிறார். வாரத்தில் அன்று ஒரு நாள் மட்டும் WFH கொடுத்திருந்தால், அந்த ஊழியருக்கு மன அழுத்தம் குறைந்திருக்கும்.
விசுவாசத்தை வளர்க்கும்
இதை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் ஷேர் செய்த மாலிக், இந்த அனுபவத்திற்கு பிறகு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க தொடங்கியதாக கூறியிருக்கிறார். வார இறுதி நாட்களில் WFH கொடுத்ததால், அலுவலக சூழல் ஒன்றும் கெட்டுபோய்விடவில்லை. மாறாக அவர்கள் இன்னும் சிறப்பாக வேலை செய்கிறார்கள். நிர்வாகம் எதை கண்டு அஞ்சுகிறதோ, உண்மையில் அது ஊழியர்களின் விசுவாசத்தை வளர்க்கும் என்று புரிந்துக்கொண்டதாக கூறியிருக்கிறார்.
மாற்றம் வரவேற்க வேண்டியது
இந்த போஸ்டுக்கு பலரும் கமெண்ட் செய்திருக்கிறார்கள். சிலர், அலுவலக நிர்வாகம் ஏன் எப்போதும் ஊழியர்கள் வேலையை விட்டு போன பின்னர் உண்மையை உணர்கிறது? என்று கேள்வி எழுப்பினர். பலர், மாலிக்கின் வெளிப்படைத்தன்மையையும், அதனால் ஏற்பட்ட மாற்றங்களையும் வரவேற்றிருக்கின்றனர்.
நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இதுபோன்ற சூழலை எதிர்க்கொண்டிருக்கிறீர்களா? அனுபவங்களை ஷேர் செய்யுங்கள்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
மத்திய அரசு வேலை.. 243 பணியிடங்கள்.. 1.77 லட்சம் சம்பளம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications