தல, தலதான்.. "வாத்தி தோனி.." சூப்பரான மூளைக்காரர்.. எதிரணி வீரரிடமிருந்து வந்த சர்ப்ரைஸ் புகழாரம்
துபாய்: சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, சிறப்பான வாத்தியார் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் ஒரு இளம் வீரர். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வீரர்.
அந்த வீரர் யாரும் அல்ல.. வளரும் இளம் அதிரடி ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர்தான் அது. மத்திய பிரதேசத்தில், பிறந்து வளர்ந்திருந்தாலும் வெங்கடேச ஐயர் பூர்வீகம் என்னவோ தமிழ்நாடு தான்.
இந்த ஐபிஎல் தொடரில் தான் அவர் அறிமுகமாகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் ஆடிவருகிறார். ஆனால் ஆரம்பமே அசத்தல்தான்.

ஆரம்பமே அசத்தல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக, தனது முதல் போட்டியிலேயே, 27 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். மும்பைக்கு எதிரான 2வது போட்டியில், உலகத்தரம் வாய்ந்த பும்ரா, பவுல்ட், மில்னே போன்றோரை எதிர் கொண்டு, 30 பந்துகளில் 53 ரன்கள் விளாசி டபுள் ட்ரீட் கொடுத்தவரும் வெங்கடேஷ் ஐயர்தான்.

எம்பிஏ படித்தவர்
எம்பிஏ படித்து, பின்னர் சிஏ பாஸ் செய்த வெங்கடேஷ் ஐயர், கிரிக்கெட் மீது கொண்ட தீராத காதலால் டொமெஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, தற்போது ஐபிஎல் தொடருக்கு தேர்வாகி இருக்கிறார்.

தோனியுடன் ஆலோசனை
சமீபத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் வெங்கடேச ஐயர் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் போட்டி முடிவடைந்த பிறகு சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் வெங்கடேச ஐயர் ஆகிய இருவரும் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
Recommended Video

தோனி கொடுத்த அட்வைஸ்
வெங்கடேஷ் ஐயருக்கு தோனி சில அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன என்று தெரியாமல் இருந்தது. அதற்கான விடை வெங்கடேஷ் ஐயர் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

தல, தலதான்
வெங்கடேஷ் ஐயர் கூறுகையில், தல தல தான்.. நெருக்கடியான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்று மாணவருக்கு வாத்தி சொல்லிக் கொடுக்கிறார். மிகச் சிறப்பான கிரிக்கெட் மூளைக்காரர் தோனி என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் டீம் ஆலோசகர்
இதில் பல வார்த்தைகள் தமிழ்தான் என்பதை வைத்துப் பார்க்கும்போது வீட்டில் ஒருவேளை வெங்கடேச ஐயர் தமிழில்தான் பேசுவார் என்று சிலாகிக்கிறார்கள் நெட்டிசன்கள். இது ஒரு பக்கம் என்றால் வளரும் இளம் வீரர்களுக்கு மகேந்திரசிங் தோனி அறிவுரை சொல்லி அவர்களை உயரத்துக்கு கொண்டு வருவதற்கு சபாஸ் போடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். நீண்ட காலமாகவே இதை தோனி செய்து வருகிறார். எனவேதான் பிசிசிஐ அவரை இந்திய கிரிக்கெட் ஆலோசகராக நியமித்துள்ளது.

தோனி பேட்டிங்
அதேநேரம் நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி சுமார் 50 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் தோனி. எனவே அவர் இந்த அறிவுரைகளை தனக்கும் சொல்லிக்கொண்டு அணிக்கு அதிகபட்சமாக ரன்களில் பங்களிப்பு வழங்க வேண்டும் என்பதும் சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கையாக இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications