இன்றைய போட்டியில் 'இந்த விஷயம்' நடந்தால்.. மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் போக முடியும்.. செம ட்விஸ்ட்
துபாய்: நடப்பு ஐபிஎல் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்குள் போக இப்போது கூட ஒரு சான்ஸ் இருக்கிறது. ஆனால் அது மணலை கயிறாக திரிப்பதை போல கடுமையான டாஸ்க்.
Recommended Video
இப்போதைக்கு பிளே ஆப் செல்ல உறுதி செய்யப்பட்ட அணிகள் என்றால், டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி ஆகியவைதான்.
நேற்று ராஜஸ்தானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றதன் மூலம், கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்குள் செல்வதை கேகேஆர் உறுதி செய்து விட்டது.

கொல்கத்தா செல்வது இன்று உறுதியாகும்
இருப்பினும் இன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையேயான போட்டியின் ரிசல்ட்டை வைத்துதான் அது உறுதியாகும். மும்பை இந்தியன்ஸ் இப்போது 13 போட்டிகளில் ஆடி 12 புள்ளிகளுடன் உள்ளது. அதாவது 6 போட்டிகளில் வென்றுள்ளது.

மும்பை நிலவரம்
இன்றைய போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். கொல்கத்தாவும் 14 போட்டிகள் முடிவில் 14 புள்ளிகளோடுதான் உள்ளது. ஆனால் கொல்கத்தா ரன் ரேட், பிளஸ் பூஜ்யம் புள்ளி 587 என்ற அளவுக்கு அதிகமாக உள்ளது. டெல்லி, சென்னையை விடவும் ரன் ரேட் அதிகம்.

என்ன கண்டிஷன்
மும்பை இந்தியன்ஸ் ரன் ரேட், மைனஸ் பூஜ்யம் புள்ளி 048 என்ற அளவில் உள்ளது. வென்றாலும் கூட ரன் ரேட்டில் கேகேஆரை விட அதிகமாக போக வேண்டிய நிலையில் மும்பை உள்ளது. அதற்கு ஒரு வழிதான் உள்ளது. மும்பை முதலில் பேட் செய்து, முடிந்த அளவுக்கு அதிக ரன்களை குவிக்க வேண்டும். அது 250 ரன்களாக இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி. பிறகு பேட் செய்யும் ஹைதராபாத்தை மிக குறைந்த ரன்களில் மடக்க வேண்டும். அதாவது 170 ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி காண வேண்டும். இது இமாலய இலக்கு.

டாஸ் முக்கியம்
அதேநேரம், 2வது பேட் செய்தாலோ, ஹைதராபாத்தை 3 ஓவர்களுக்குள் மும்பை சேஸ் செய்தாக வேண்டும். அதுவும் நடக்காத விஷயம். எனவே ஒருவேளை டாஸ் போடும்போது மும்பைக்கு முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காவிட்டால், அப்போதே, பிளே ஆப் போகப்போவதில்லை என்று அவர்கள் முடிவு செய்து விடலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications