துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆர்.சி.பி கேப்டனாக இவரை நியமிக்கலாம்.. தோனியின் பண்பு இருக்கிறது.. முன்னாள் வீரர் பரிந்துரை!

Google Oneindia Tamil News

துபாய்: மிகவும் வேதனையான நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை துறந்துள்ளார் விராட் கோலி. இந்தியா அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்த கோலிக்கு கடைசியில் ஐ.பி.எல் கோப்பை எட்டாக்கனியாகவே மாறி விட்டது.

புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்புலி வருகிறது கூடலூர் நோக்கி.. 8 நாட்களுக்கு பிறகு.. கேமராவில் பதிவானது.. கிராம மக்களுக்கு வார்னிங்

பல ஆண்டுகளாக ஐ.பி.எல்.லில் பெங்களூரு சொதப்பி வந்தாலும், கடந்த ஆண்டு ஐ.பி.எல்.லும், நடப்பு ஐ.பி.எல்.லும் பெங்களூருவுக்கு நன்றாக அமைந்தது என்றே சொல்லலாம். ஆனால் கோலியின் துரதிருஷ்டவசமோ என்னவோ இம்முறை கடைசியில் வாய்ப்பு கைநழுவி போய்விட்டது.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

இது ஒருபுறமிருக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் இப்போது கிரிக்கெட் உலகில் பம்பரமாக சுழன்று வருகிறது. இதில் பலரது முதல் சாய்ஸ்சில் இருப்பது டேவிட் வார்னர். கேப்டன் பதவியையும் பறித்து, அணியில் கூட இடம் கிடைக்காமல் செய்து அவமானப்படுத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் மீது வார்னர் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்.

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

அடுத்த முறை அவர் ஹைதராபாத் அணியில் இடம் பெற மாட்டார் என்று உறுதியாக தெரிந்து விட்டதால், பொது ஏலத்தின்போது அவர் பெங்களூருக்கு எடுக்கப்பட்டு கேப்டனாக வந்து விடுவார் என்று ஒருபக்கம் கூறுகிறார். பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு அங்கு இருக்க துளி கூட விருப்பம் இல்லை என்றும் அவரும் பொது ஏலத்துக்கு வந்து பெங்களூரு அணிக்காக எடுக்கப்பட்டு கேப்டனாக இருப்பார் என்ற தகவலும் மறுபக்கம் உலா வருகின்றன.

மைக்கேல் வாகன் உறுதி

மைக்கேல் வாகன் உறுதி

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டனாக ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லரை கேப்டனாக நியமிக்கலாம் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- நான் ஜோஸ் பட்லரை பெங்களூரு கேப்டனாக தேர்வு செய்வேன், ஏனென்றால் ஜோஸ் பட்லர் தோனியைப் போல இயல்பாக இருப்பார். எனக்கு அவர் மீது எந்த சந்தேகமும் இல்லை. அவர் இங்கிலாந்து அணியில் மோர்கனின் கீழ் விளையாடி வருகிறார்.

Recommended Video

    கடைசி வரை நம்பினோம்.. திடீரென கண்கலங்கிய Rishabh Pant
    திறமையான நபர்

    திறமையான நபர்

    அதே போல், தந்திரோபாயமாக மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கிறார். ராஜஸ்தான் என்ன நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் தனிப்பட்ட முறையில் ஜோஸ் பட்லரை ஆ.ர்சி.பி பக்கம் அழைத்துச் சென்று, அவருக்கு கேப்டன் பதவியை கொடுப்பேன். விராட் கோலி போன்ற ஒரு கேப்டனின் ஆளுமையை யார் கொண்டு செல்லப் போகிறார்கள்? அந்த இளைஞன்(ஜோஸ் பட்லர்) ஒரு திறமையான நபராக இருப்பார், அவர் தன்னை நன்கு அறிந்தவர் மற்றும் டி 20 கிரிக்கெட்டை மிகவும் புத்திசாலித்தனமாக அறிந்திருக்கிறார், குறிப்பாக மக்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தெரியும் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Former England cricket captain Michael Vaughan has said that Rajasthan player Jose Butler could be appointed as the captain of the Royal Challengers Bangalore team
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X