20 நிமிஷம் லேட்டாக போயிருந்தால், சுவாச குழாய் வெடித்திருக்கும்.. பாகிஸ்தான் வீரர் பகீர்

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் 67 ரன்கள் விளாசினார். இந்த நிலையில்தான், அவர் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.

Recommended Video

    Mohammed Rizwan Shares ICU Details! Indian doctor helped for Openers Recovery | OneIndia Tamil

    நெஞ்சில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தியரான ஒரு மருத்துவர்தான், அவருக்கு சிகிச்சை வழங்கினார்.

    அரையிறுதியில் இவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடிய முகமது ரிஸ்வான் ஆட்டம், பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அவரது அர்ப்பணிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

    சுவாச பிரச்சினை

    சுவாச பிரச்சினை

    இதுகுறித்து ரிஸ்வான் நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, சுவாசமே விடமுடியாத நிலை இருந்தது. மூச்சு குழாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் தெரிவித்தனர்.

    டிஸ்சார்ஜ்

    டிஸ்சார்ஜ்

    அவர்கள் வேறு எதுவும் தெரிவிக்கவில்லை. காலைக்குள் உடல்நிலை தேறிவிடும் என்றும், டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்றும் தெரிவித்தனர். ஆனால், மாலையில், அடுத்த நாள் மாலைதான் டிஸ்சார்ஜ் செய்ய முடியும் என்று கூறினர். ஏன் இவ்வளவு மோசமாகிவிட்டது என எனக்கு புரியவில்லை. அப்போதுதான், நர்ஸ் ஒருவரிடம் நான் கேட்டேன். 20 நிமிடங்கள் தாமதமாக மருத்துவமனைக்கு வந்திருந்தால், எனது இரு காற்றுக் குழாய்களும் வெடித்திருக்கும் என்று நர்ஸ் கூறினார்கள்.

     இரு நாட்கள் சிகிச்சை

    இரு நாட்கள் சிகிச்சை

    இரு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக, டாக்டர் தெரிவித்தார். அவ்வப்போது எனக்கு பரிசோதனைகள் நடத்தினார்கள். ஆனால் எனது மனதில் ஓடியதெல்லாம் எப்போது வெளியே போவேன், எப்போது கிரிக்கெட் விளையாடுவேன் என்பதை பற்றிதான். எனக்கு சிகிச்சையளித்த இந்திய மருத்துவர், நான் அரையிறுதியில் விளையாட வேண்டும் என்று ஆசைபடுவதாக தெரிவித்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.

    விரைவாக சரியானது

    விரைவாக சரியானது

    அதேநேரம், நான் விளையாடும் நிலையில் இல்லை என்று அவர் தெரிவித்தபோது அதிர்ச்சியடைந்தேன். விளையாடினால் ரிஸ்க் ஏற்படும் என்று அவர் கூறினார். இருப்பினும் சிகிச்சை வேகமாக பலன் கொடுத்து விளையாட முடிந்தது. இவ்வாறு ரிஸ்வான் தெரிவித்தார். இவ்வாறு ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+