ஏவுகணை வருது.. வீட்டை விட்டு யாரும் வெளியே வராதீங்க... பொதுமக்களுக்கு ஐக்கிய அரசு அமீரகம் திடீர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

துபாய்: அபுதாபி, துபாய் உள்பட ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்த நாடு திடீரென்று அறிவித்துள்ளது.

please-remain-in-a-safe-location-uae-messeges-to-people-after-detects-a-missile-threat

மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமான நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இங்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

ஈரான் - அமெரிக்கா போரில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஐக்கிய அமீரகமும் ஒன்றாகும். சமீபகாலமாக ஐக்கிய அரபு அமீரகம் எந்த அச்சுறுத்தலுக்கும் உள்ளாகாமல் இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது அந்த நாட்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனை அந்த நாட்டின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன.

இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும் என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஐக்கிய அரபு அமீரகத்தின் வானவெளி பாதுகாப்பு அமைப்பு நம் நாட்டுக்கான ஏவுகணை அச்சுறுத்தலை கண்டுபிடித்துள்ளது. இதனால் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். தொடர்ந்து வார்னிங் மற்றும் அடுத்தக்கட்ட அப்டேட்டுகளை அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்'' என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் வீடுகளிலேயே இருப்பது நல்லது என்பதை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போதைய சூழலில் எந்த நாட்டில் இருந்து ஏவுகணை வந்தது என்பது பற்றி எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. அநேகமாக ஈரானில் இருந்து ஏவுகணை வந்திருக்கலாம் என்று பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் ஈரான் - அமெரிக்கா இடையேயான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரான் - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தம் தொடர்பாக பிரச்சனைகள் போய் கொண்டே தான் இருக்கின்றன. இன்று கூட ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவிற்கு சொந்தம் என்று டிரம்ப் அறிவித்தார்.

அதுமட்டுமின்றி ஈரான் - அமெரிக்கா இடையேயான போரில் ஈரான் நாடு சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. ஏனென்றால் அமெரிக்காவின் நட்பு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி பக்கத்தில் அமெரிக்காவின் அல் தஃப்ரா விமானப் படைத் தளம் (Al Dhafra Air Base) அமைந்துள்ளது. இதனால் தான் ஈரான், ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்கி வந்த நிலையில் சமீபத்தில் அட்டாக் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அமெரிக்கா - ஈரான் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் பதற்றம் தொற்றி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+