மீட்டிங் நடத்திய டாப் தலைகள்.. கடுப்பில் பிசிசிஐ.. குறி வைக்கப்படும் வீரர்கள்.. இன்று பிரஸ் மீட்?!
துபாய்: தொடர் தோல்வியை தொடர்ந்து இந்திய வீரர்கள் சிலர் மீதும் பயிற்சியாளர் குழு மீது பிசிசிஐ விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வரிசையாக இந்த வீழ்ந்துள்ளது.
இதனால் இந்திய அணி செமி பைனல் செல்லும் வாய்ப்பு கனவாகி உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு வீரர்களின் மோசமான பார்ம் காரணம் என்று சொல்ல முடியாது.

வாய்ப்பு
இதனால் இந்திய வீரர்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பிசிசிஐ அமைப்பின் முக்கிய டாப் தலைவர்கள் இது தொடர்பாக மீட்டிங் நடத்தியதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம், சொதப்பியது எங்கே என்று ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்திய அணியின் தோல்விக்கு வீரர்கள் மட்டும் காரணம் கிடையாது.

பிட்சும் காரணம்
மோசமான பிட்சும் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு வகையில் முக்கிய காரணம் ஆகும். அதேபோல் டாஸ் தோல்வி அடைந்ததும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் இதை எல்லாம் தாண்டி இந்திய அணி வீரர்கள் பலர் கடந்த போட்டியில் சரியாக ஆடவில்லை. ஒரு ஸ்பிரிட் இல்லாமல் பேட்டிங் செய்தனர். பலர் மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.

ஸ்பிரிட்
இந்திய அணியிடம் கப்பாவில் காணப்பட்ட அந்த ஸ்பிரிட் சுத்தமாக இல்லை. வீரர்களின் போராட்ட குணம் அடியோடு காணாமல் போய்விட்டது. இது போக அணி தேர்விலும் நிறைய சொதப்பல்கள் நடந்து உள்ளன. இந்திய அணியின் டாப் ஸ்பின் பவுலர் அஸ்வினை வெள்ளை பால் கேமில் எடுத்துவிட்டு அவருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.

டாப் ஸ்பின் பவுலர்
அதேபோல் வருண் ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றதும் கொஞ்சம் லெக் ஸ்பின் பவுலரை முயன்று இருக்கலாம். ராகுல் சாஹருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். ஆனால் இந்திய அணி அதையும் செய்யவில்லை. முக்கியமாக பிசிசிஐ அணி தேர்விலேயே சொதப்பிவிட்டது. துபாயில் சிறப்பாக ஆடிய சாஹளை அணியில் எடுக்கவில்லை. இரண்டு சீசனாக ஐபிஎல்லில் நன்றாக ஆடி வரும் அனுபவம் மிக்க தவானை அணியில் எடுக்கவில்லை.

அனுபவம் இல்லைஇ
மாறாக அனுபவம் இல்லாத இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களால் சர்வதேச மேடைகளில் சரியாக ஆட முடியவில்லை. இது போக இன்னொரு பக்கம் தொடர் ஐபிஎல் போட்டிகளால் வீரர்கள் பலர் கடும் களைப்பில் உள்ளனர். அதில்தான் வீரர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். இதனால் பல வீரர்களால் சர்வதேச போட்டிகளில் சரியாக ஆட முடியவில்லை.

சிக்கல்
இப்படி இந்திய அணி பல்வேறு சிக்கலில் தவித்துக்கொண்டு இருக்கிறது. வீரர்கள் தேர்வு தொடங்கி ஆட்ட வியூகம் வரை பல விஷயங்கள் சிக்கலாக இருக்கிறது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அவ்வளவு சிறப்பாக இந்த தொடரில் செயல்படுவதாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் பிசிசிஐ இது தொடர்பாக மீட்டிங் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆக்சன்
பயிற்சியாளர் குழு தொடங்கி சில வீரர்கள் வரை பலர் மீது ஆக்சன் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இன்னும் 3 போட்டிகள் உள்ளன. அந்த போட்டிகள் முடிந்த பின் அணியில் பெரிய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று பிசிசிஐ சார்பாக முக்கியமான பிரஸ் மீட் ஒன்றும் நடக்க உள்ளது. இதில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications