இனி பள்ளிகளில் பாலியல் தொந்தரவு விழிப்புணர்வு வகுப்பு! அன்பில் மகேஷ் அதிரடி திட்டம்
ஈரோடு: தனியார் பள்ளிகளில் பாலியல் குறித்த விழிப்புணர்வு ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவை சின்மயா பள்ளியில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது போன்ற ஒரு கருத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டு வரும் கிளை நூலகம் தரம் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை எண் 43 படி தரம் உயர்த்தப்பட்டு மாதிரி (டிஜிட்டல்) நூலகம் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

ஆன்லைன் கல்வி
பள்ளிகளில் பெண்குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்ந்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுமா என செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாகவே பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்ற வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனை கொண்டு குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கும் விழிப்புணர்வு கொண்டுவரப்படும் என்றார்.

ஒரு மணி நேரம் போக்சோ சட்ட விழிப்புணர்வு
மேலும், பள்ளிகள் தற்போதுதான் முழுமையாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இனிமேல்தான் மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், 37ஆயிரத்து 700 அரசு பள்ளிகளில் ஒரு மணி நேரம் வகுப்பாக போக்சோ சட்டம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் பள்ளிகள்
தனியார் பள்ளிகளில்தான் போதிய விழிப்புணர்வுகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவர்களுக்கு அதிக அளவுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெண் போலீசார்
அரசு பள்ளிகளில் காவல்துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரப்பட்டனர். ஆனால் பெண் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர்களால், இந்த பணிகளில் ஈடுபட முடியவில்லை. ஆனால், இப்போது ஸ்டாலின் தலைமையிலான அரசு பெண் போலீசாரை விஐபி பந்தோபஸ்து பணிகளில் ஈடுபட தேவையில்லை என உத்தரவிட்டுள்ளது. எனவே இப்போது பெண் போலீசார் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications