திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டமுத்து காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
ஈரோடு: திமுக முன்னாள் எம்எல்ஏ ஆண்டமுத்து காலமானார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆண்டமுத்து. முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டமுத்து வயது முதிர்வால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. ஆண்டமுத்து திமுக சார்பாக 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை பவானிசாகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டமுத்து மறைவுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், "பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், கழகத்தின் மூத்த செயல்வீரருமான வி.ஏ.ஆண்டமுத்து மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

கழகத்தின் மீதும், தலைவர் கருணாநிதி மீதும் மிகுந்த பற்று வைத்திருந்த ஆண்டமுத்து அவர்களின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கழகத்தினர் மற்றும் பவானிசாகர் தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்












Click it and Unblock the Notifications