ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.. செங்கோட்டையன் நம்பிக்கை
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி, நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் நடக்க உள்ள அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்று முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரடைப்பால் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேமுதிக தரப்பில் அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த், அமமுக சார்பாக சிவ பிரசாந்த் உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் யார்?
இதனிடையே நாம் தமிழர் கட்சி சார்பாக பெண் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளார். ஆனால் அதிமுக தரப்பில் இதுவரை வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் தேர்வு, இரட்டை இலை சின்னத்தை பெறுவது, தேர்தல் பிரச்சார வியூகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு நாட்களாக ஆலோசிக்கப்பட்டது.

நாளை விசாரணை
இருப்பினும் இதுவரை வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. இதனிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் இரட்டை இலை சின்ன வழக்கின் விசாரணைக்கு பின் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆலோசனை
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் அதிமுகவின் கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செங்கோட்டையன் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலில் தேர்தல் பணி குழுவில் நியமிக்கப்பட்டவர்கள் பல தேர்தலை கண்டவர்கள். இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி இலக்கை அடைய அயராது உழைத்து வருகிறோம். வரலாறு காணாத வெற்றியடைய எடப்பாடி ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆட்சி மன்றக் குழு கூட்டம்
வெற்றி எளிதில் அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வெற்றி செங்கோட்டையில் எதிரொலிக்கும். திமுக கூட்டணி மாடியில் இருந்து மக்களைப் பார்க்கிறார்கள். அதிமுக மக்களோடு நின்று மக்களை பார்க்கிறது. அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறும். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பிரச்சாரம் தொடங்கி நடைபெறுகிறது .

2 நாட்கள்
அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறது. இன்னும் பணிகள் வேகமாக நடைபெறும். மாற்றம் தேவை என மக்கள் நினைக்கின்றனர். இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும். இடைத்தேர்தலில் அதிமுகவுடன் யார் யார் கூட்டணி என்பது குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications