ஓடை நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்த திமுக மாவட்ட கவுன்சிலர்! 1.50 ஏக்கர் நிலத்தை மீட்ட அதிகாரிகள்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் 30 ஆண்டுகளாக அரசு நிலத்தை திமுக மாவட்ட கவுன்சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1.50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இதனால் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் திமுக பிரமுகரிடம் இருந்து 1.50 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

ஓடை நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள காடப்பநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவர் திமுகவில் அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தின் அருகே 2.50 ஏக்கர் ஓடை புறம்போக்கு நீர் வழித்தடத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து பல்வேறு பயிர்களை பயிரிட்டு வந்துள்ளதாக கூறப்டுகிறது.

மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
இதனால் மழை காலத்தில் ஓடை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மழைநீர் விவசாய நிலத்தில் தேங்குவதால் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதாவது ஆக்கிரமிப்பு தொடர்பாக வருவாய்த்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

1.50 ஏக்கர் நிலம் மீட்பு
இதையடுத்து வருவாய் துறையினர், நில அளவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் நிலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது சதாசிவம் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டர் மூலம் நிலத்தை சமன் செய்து முதற்கட்டமாக 1.50 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

தொடர் நடவடிக்கை
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கிடையே தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications