ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மிஸ்டர் அண்ணாமலை.. கர்நாடகாவில் லூலூ மால் இருக்கே தெரியுமா".. போட்டு தாக்கிய அழகிரி

லூலூ மால் கர்நாடகாவிலும் இருப்பதாக கேஸ் அழகிரி பதிலடி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

ஈரோடு: கர்நாடகாவில் லுலு மால் இயங்குவதை மூடிமறைத்து விட்டு தமிழகத்தில் எதிர்ப்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. காங்கிரசையும் திமுகவையும் அழிகிற நிலையில் இருப்பதாகக் கூறுகிறார். தோல்வியிலிருந்து பாஜக பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை' என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க துபாய் நாட்டிற்கு சென்றிருந்தபோது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்? இலங்கை வன்முறை: கோத்தபாய, மகிந்த ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்? தயார் நிலையில் 5 விமானங்கள்?

குறிப்பாக, 6 நிறுவனங்களில் அதிகப்படியாக கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசப் அலியின் லூலூ குரூப் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சுமார் 3500 கோடி ரூபாயைத் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

 லுலு மால்

லுலு மால்

இந்த அறிவிப்புக்கு, லூலூ மாலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். லூலூ ஹைபர் மார்கெட் தமிழகத்தில் வந்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மாநிலத்தில் உள்ள வணிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.. அப்போதே இந்த விஷயத்தில் தலையிட்டார் பாஜக அண்ணாமலை.. "இந்த விவகாரத்தில் சிறு வியாபாரிகளுக்கு ஆதரவாக பாஜக இருக்கும், தமிழ்நாட்டில் லூலூ மாலின் ஒரு செங்கல்லைக் கூட வைக்க பாஜக அனுமதிக்காது" என்று கொந்தளித்து பேட்டி தந்திருந்தார்.

 துக்ளக் விழா

துக்ளக் விழா

இந்த விவகாரம் இன்றுவரை ஓயவேயில்லை.. இதுகுறித்து அண்ணாமலைக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.. ஈரோடில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி சொன்னதாவது: "துக்ளக் ஆண்டு விழாவில் நிதியமைச்சர் பேசும்போது, நிர்மலா சீதாராமன் இந்தியை படிக்காதீர் என்கிற அணுகுமுறையினால் தமிழகம் தனித்து விடப்பட்டுள்ளதாக சொல்லி உள்ளார். இதன்மூலம் தமிழர்களின் உணர்வை அவர் புண்படுத்தி விட்டார்.

முன்னுரிமை

முன்னுரிமை

இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற நேருவின் உறுதிமொழியால் பெற்ற சட்ட பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கிற வகையில் அவர் பேசிவிட்டு போயிருக்கிறார். மத்திய அரசின் எல்லா துறைகளிலும் வடமாநிலத்தவர்களுக்குதான் முன்னுரிமை தரப்படுகிறது.. அவர்களுக்குதான் தமிழகத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கிற சூழல் ஏற்பட்டுள்ளது... இங்கே நம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள்...

சாதனை

சாதனை

தமிழகத்திற்கு விரோதமாக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். 60 ஆண்டுகளாக, உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உயர்த்திய பெருமை காங்கிரசுக்கு உள்ளது.. வெறும் 8 வருட சாதனைகளை சொல்வதற்கு எதுவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதற்கு நிர்மலா சீதாராமனுக்கு எந்த தகுதியும் இல்லை.

 அழிவு நிலை

அழிவு நிலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லுலு மால்கள் தொடங்குவதைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார். ஆனால் கர்நாடகாவில் லுலு மால் இயங்குவதை மூடிமறைத்து விட்டு தமிழகத்தில் எதிர்ப்பது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.. காங்கிரஸ் கட்சி, திமுக இரண்டையும் அழிவு நிலையில் இருப்பதாக சொல்கிறாரே.. தோல்வியிலிருந்து பாஜக இன்னும் பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது" என்றார்.

English summary
ks azhagiri slams tn bjp leader annamalai ans says about karnataka lulu mall லூலூ மால் கர்நாடகாவிலும் இருப்பதாக கேஸ் அழகிரி பதிலடி தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X