"உடனே வீட்டுக்கு வாம்மா".. 22 நாட்களாக மனைவியை காணோம்.. ஈரோடு மருத்துவமனையில் மகள்.. கணவர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: குடும்பத்தில் ஏற்படும் ஒரு சின்ன பிரச்சினை கூட சில நேரங்களில் பெரிய சோகத்தை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி ஏற்பட்ட குடும்பத் தகராறால் 22 நாட்களாக ஒரு பெண்ணை ஈரோட்டில் காணவில்லை. மனைவியை தேடி அலையும் கணவர் இப்போது எடுத்துள்ள முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. என்ன நடந்தது பவானியில்?

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வசித்து வரும் தம்பதியினருக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாதாரண குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மனைவி, கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.. ஆனால், அதன்பிறகு அவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லையாம்.

கோபத்தில் வீட்டை விட்டு கிளம்பிய மனைவி, கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று கணவன் நினைத்துள்ளார்.. ஆனால், மனைவி வரவேயில்லை..

Missing Wife

ஈரோடு மாவட்டம் பவானி

இதனால் பதற்றமடைந்த கணவர் அவரைத் தேடத் தொடங்கியுள்ளார்.. எங்காவது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்த கணவர், மனைவியின் சொந்தக்காரர்கள் வீட்டுகளுக்கெல்லாம் சென்று விசாரித்துள்ளார். தொடர்ந்து உறவினர்கள் வீடுகள் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார். ஆனாலும் மனைவி எங்கு இருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

ஒரு நாள், 2 நாளில் மனைவி வீடு திரும்புவார் என்று கணவர் நினைத்தார். ஆனால் அப்போதும் அவர் வரவேயில்லை.. இப்படியே நாட்கள் கடந்துள்ளன. மனைவி வீட்டை விட்டு வெளியேறி இன்றுடன் 22 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால் கணவர் தொடர்ந்து தேடி வருகிறார்.

கணவர் வெளியிட்ட வீடியோ

ஒருபுறம் மனைவி கிடைக்காமல் கணவர் தவித்து வரும் நிலையில், இவர்களின் மகள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மகளின் உடல்நிலையும் குடும்பத்தினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தாய் அருகில் இல்லாத இந்தச் சூழலில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகளின் நிலையை நினைத்து கணவர் வேதனை அடைந்துள்ளார். இதனால் மனைவியை எப்படியாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நோக்கில், கணவர் சோஷியல் மீடியாவில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"உடனே வீட்டிற்கு திரும்பி வா"

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளுடன் வீடியோ வெளியிட்ட அவர், மகளின் உடல்நிலையை எடுத்துக்கூறி மனைவி உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், வீடியோவில், "உடனே வீட்டிற்கு திரும்பி வா" என்று மனைவிக்கு உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார். 22 நாட்களாகியும் மனைவியைப் பற்றிய தகவல் கிடைக்காத நிலையில், இந்த வீடியோ மூலமாக அவரைத் தொடர்புகொள்ள முடியும் என்று கணவர் நம்பிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

காவல்துறை தேடல்

இதற்கிடையே, மனைவி காணாமல் போனது குறித்து கணவர் தரப்பில் பவானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து மாயமான பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு, மாயமான பெண் இருக்கும் இடம் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக பவானி போலீசாருக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+