ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது

Google Oneindia Tamil News

ஈரோடு: அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் தொடங்க உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா.

அண்மையில் திடீர் உடல்நலக் குறைவால் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து சட்டசபை தேர்தல்களுடன் பிப்ரவரி 27-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27-ந் தேதி பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Nomination filing for Erode East By Poll from Jan.31

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகியவையும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. அதிமுகவின் உட்கட்சி மோதலால் எந்த அணியும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதிமுகவின் முடிவுகளுக்காக பாஜகவின் தெளிவான நிலைப்பாடும் அறிவிக்கப்படவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, கமல்ஹாசன் பிரசாரம்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, கமல்ஹாசன் பிரசாரம்!

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31-ந் தேதி தொடங்க உள்ளது. நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெறும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7. இதனையடுத்து மறுநாள் பிப்ரவரி 8-ல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடத்தப்படும். அனைத்து வேட்புமனுக்களையும் திரும்பப் பெற பிப்ரவரி 10-ந் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் தொடங்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்டுப்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணிவரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வரும் 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய இயலாது.

English summary
Nomination filing for Erode East By Poll from Jan.31. Erode East By election will be held on Feb.27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X