ஈரோடு கிழக்கில் ஈபிஎஸ்ஸை பின்தள்ளிய ஓபிஎஸ்! தேர்தல் பணிக்குழு அறிவிப்பு.. ஆனால் பாஜகவுக்கு ஆதரவு!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு ஓ பன்னீர் செல்வம் தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் டஃப் கொடுக்கும் வகையில் வேட்பாளரை நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்காக 118 பேருடன் தேர்தல் பணிக்குழுவை ஓ பன்னீர் செல்வம் அமைத்துள்ளார். இந்த எண்ணிக்கை என்பது எடப்பாடி பழனிச்சாமி அமைத்த தேர்தல் பணிக்குழுவை விட அதிகமாகும். இருப்பினும் ஓ பன்னீர் செல்வம் தரப்பு பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தான் உள்ளதால் பணிக்குழு தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் போட்டி
அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் அறிவிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓ பன்னீர் செல்வம் தரப்போ பாஜக போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இல்லாவிட்டால் வேட்பாளரை நிறுத்துவோம் என தெரிவித்துள்ளது.

மவுனம் காக்கும் பாஜக
மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆகியோர் பாஜகவிடம் நேரடியாக ஆதரவு கோரியுள்ளது. இதில் பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்தவில்லை. பாஜக தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையெழுத்துடன் கூடிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது. இதற்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிபதிகள் அறிவுரையின்படி திங்கட்கிழமை மீண்டும் முறையிட எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக உள்ளது.

ஓ பன்னீர் செல்வம் ஆலோசனை
இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் கேவியட் மனு தாக்கல் செய்யலாமா? இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் தரப்பு ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

118 பேருடன் தேர்தல் பணிக்குழு
மேலும் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, ஒருவேளை பாஜக தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமிக்கு டஃப் கொடுக்கும் வகையில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும்,தொகுதியில் களப்பணி செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 118 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை ஓ பன்னீர் செல்வம் அமைத்துள்ளார். எம்எல்ஏவாக உள்ள வைத்திலிங்கம் தலைமையில் இந்த தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியை விட ஒன்று கூடுதல்
முன்னதாக திமுக தரப்பில் 11 அமைச்சர்கள் உள்பட 30 பேருடனும், அதிமுக தரப்பில் 117 பொறுப்பாளர்களுடனும், தேமுதிக சார்பில் 168 பேருடனும், அமமுக சார்பில் 294 பேருடனுன் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை விட எண்ணிக்கையில் ஒன்று கூடுதலாக 118 பேருடன் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு ஆதரவு
இருப்பினும் கூட இதுபற்றி ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாத பட்சத்தில் ஓ பன்னீர் செல்வம் நிச்சயம் வேட்பாளரை அறிவிப்பார் என்றார். இதனால் ஒருவேளை ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஓ பன்னீர் செல்வத்தின் இந்த பணிக்குழு பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் என கூறப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications