விஜய்யின் தவெக கட்சி துண்டுடன் வந்த சீமான்? டிசைனும் காப்பியா.. ஈரோடு கூட்டத்தில் அதிர்ந்த தம்பிகள்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக கட்சித் துண்டை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சிவப்பு, மஞ்சள் நிறத்திலான துண்டை மட்டுமே சீமான் அணிந்திருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக விசி சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் சீதாலட்சுமியும் போட்டியில் உள்ளனர். அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதனால் திமுகவுக்கு கடுமையான போட்டியளிக்கும் முடிவில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

erode east by election 2025 seeman tvk 2025

அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாம் தமிழர் கட்சியினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த பரப்புரையின் போது சீமான் வழக்கம் போல் நாம் தமிழர் கட்சியின் துண்டை தோளில் அணித்து பேசி வருகிறார். ஆனால் இம்முறை நடக்கும் பரப்புரையில் நாதக துண்டில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

அதாவது சீமான் அணிந்துள்ள நாதக துண்டும், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் துண்டும் ஒன்று போல் அமைந்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் துண்டை பொறுத்தவரை சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு உள்ளிட்ட நிறங்கள் இடம்பெற்றிருக்கும். அதாவது மஞ்சள் நிறத்திற்குள் கருப்பு நிறத்தில் ஒரு கோடு போடப்பட்டிருக்கும்.

இந்த 3 நிறங்களும் வெளியில் தெரியும்படி தான் நாம் தமிழர் கட்சியினர் தங்களின் துண்டை தோள்களில் அணிந்து வந்துள்ளனர். ஆனால் நேற்று நடைபெற்ற ஈரோடு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நடிகர் விஜய்-ன் தவெக துண்டு உருவாக்கப்பட்டுள்ள டிசைனில், சீமானும் துண்டு அணிந்திருக்கிறார். அதாவது, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான கட்சித் துண்டை மட்டுமே சீமான் அணிந்துள்ளார்.

அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, பழைய மாதிரி சிவப்பு, மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தில் துண்டு அணிந்திருக்கிறார். இதனால் நடிகர் விஜய்-ன் ஆதரவாளர்களை தங்கள் பக்கமே இழுக்க சீமான் இப்படியான செயல்களில் ஈடுபட்டிருப்பதாக தவெக தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தவெகவின் டிசைனை நாம் தமிழர் கட்சி காப்பியடித்துவிட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே சீமானிடம் ஏன் எந்த மாற்றம் ஏற்பட்டது என்ற கேள்வியும் அவரது தம்பிகளிடையே எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+