Magalir urimai thogai: மகளிர் உதவித்தொகை ரூ 2500 எப்போது? செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: மகளிர் உதவித்தொகையாக ரூ 2500 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

கோபிசெட்டிபாளையம் கூட்டுறவு பண்டக சாலை அங்காடி மூலம் 200 ரூபாய் விலையிலான சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனையை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

தமிழக அரசின் கூட்டுறவுத் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

sengottaiyan

10 பொருட்கள்

இத்திட்டத்தின் கீழ், 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்பு ரூ.200/-க்கு கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இச்சிறப்பு மளிகை தொகுப்பு விற்பனைத் திட்டத்தை, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

வருவாய் துறை அமைச்சர்

அதனை தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்தித்த போது, அவர் கூறுகையில், தமிழக முதல்வர் விஜய், வருகிற மூன்றாம் தேதி பெருந்துறையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய நலத்திட்டங்களைத் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க உள்ளார்.

பொற்கால ஆட்சி

குறிப்பாக, தற்போது தமிழ்நாட்டில் ஒரு பொற்கால ஆட்சி அமைந்துளளது. தமிழக முதல்வர் விஜய் அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், அனைத்துத் துறை அமைச்சர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

விரைந்து நடவடிக்கை

தமிழ்நாட்டில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமோ, அவை அனைத்தையும் விரைந்து செயல்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

ரூ 2500

மகளிர் உதவித்தொகையாக 2,500 ரூபாய் வழங்குவது குறித்து தமிழக முதல்வர் விஜய் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் அறிவித்த அடுத்த நாளே திட்டங்கள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

எடப்பாடி பேச்சு

செங்கல்பட்டில் தமிழக முதல்வர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்துக்கள் குறித்து பார்க்கும்போது, ஒவ்வொருவரும் தங்களுக்குத் தகுந்தாற்போல் கருத்துக்களைக் கூறுவது வழக்கம்தான். அவர்களது ஆட்சிக் காலத்தில் என்னென்ன நடைபெற்றது என்பதை எங்களாலும் சுட்டிக்காட்ட முடியும்.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி என்ற முறையில் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டுமே தவிர, பல்வேறு கருத்துக்களைக் வெளிப்படுத்த கூடாது. சட்டமன்ற இடைத்தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் எப்போது?

இது தொடர்பான இன்னொரு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இது போன்ற நடைமுறைகள் எல்லாம் முடிந்த பிறகுதான் உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிக்க முடியும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான காலக்கெடு வரும் பிப்ரவரி மாதம் முடிவடைய உள்ளதால், அதற்குப் பிறகுதான் உள்ளாட்சித் தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.

கோயில் நிலங்களுக்கு பட்டா கொடுத்தால் ஆக்ஷன் பாயும்! நீதிமன்ற உத்தரவால் நெருக்கடியில் முதல்வர் விஜய்

நிலச்சரிவு

அண்மையில் நீலகிரி மற்றும் கொடைக்கானல் வட்டப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்துப் பேசுகையில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயற்கைச் சீற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், தற்போது தமிழ்நாட்டு மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் மண் சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளது; பெரிய அளவில் சேதங்கள் எதுவும் இல்லை. அந்த அளவிற்கு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட ஆட்சியர்கள்

முதல்வரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் இணைந்து தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டு மனைப் பட்டா

ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் பட்டா வழங்குவது குறித்து, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. எப்போது முதலமைச்சர் உத்தரவிடுகிறாரோ, அப்போது தகுதியுடைய அனைவருக்கும் இந்த நிலப் பட்டாக்கள் விரைவாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+