"எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் செந்தில் பாலாஜி" எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியை மக்கள் நம்ப வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஈரோடு: எதிர்காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க போகிறவர் செந்தில் பாலாஜி தான் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜியின் யோசனையால் தான் மக்களை பட்டியில் அடைத்து வைக்கப்படுவதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜியை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் தலைவர்களின் இறுதிக்கட்ட பிரச்சாரம் தொடங்கியுள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு-வை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை திமுக நிறுத்தி விட்டது. நாங்கள் கொண்டு வந்த மினி கிளினிக் திட்டம், தாலிக்குத் தங்கம், அம்மா குடிநீர், இருசக்கர வாகனத்துக்கு மானியம், அம்மா சிமெண்ட் போன்றவற்றை நிறுத்தி விட்டனர்.

விலைவாசி உயர்வு
கட்டுமானப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. செங்கல், ஜல்லி, எம்.சாண்ட், மணல் என எல்லாவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.1,000 வீதம் உரிமைத்தொகை தருவதாகக் கூறியிருந்தார்கள். இப்போது கேட்டால் எல்லாருக்கும் கொடுக்க முடியாது. கணக்கு பார்த்து கொண்டிருக்கிறோம் என்று நிதியமைச்சர் கூறுகிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000
அதை நம்பித்தான் மக்கள் வாக்கு செலுத்தினார்கள். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானதும் ஒரு பேச்சு பேசுகிறது.
இங்கு வீடு, வீடாக அமைச்சர்கள் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களிடம் கேளுங்கள். காஸ் சிலிண்டருக்கு மானியமாக ரூ.100ம், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 என 22 மாதங்களுக்கு கணக்கு போட்டு ரூ.24,200 கொடுக்க வேண்டுமென ஸ்டாலினிடம் கேளுங்கள்.

கொடநாடு விவகாரம்
கொடநாடு கொலை வழக்கு என்று எங்களை மிரட்டுகிறார்கள். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது அதிமுக அரசு தான். அவர்களை ஜாமீனில் எடுத்தது சென்னையைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர், திமுக வழக்கறிஞர் மற்றும் ஒரு திமுக எம்.பி. ஆகியோர் தான். அப்படியானால் கொடநாடு கொலை வழக்கில் யார் தவறு செய்துள்ளார் என்பதை மக்கள் பார்க்க வேண்டும்.

செந்தில் பாலாஜி பற்றி இபிஎஸ்
அதேபோல், ஈரோடு மக்களை ஏமாற்றுவதற்காகவே ஒருவரை அனுப்பியுள்ளார்கள். அவர்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதிமுக ஆட்சியின் போது ஆர்.கே. நகர் தொகுதியில் ரூ.20 நோட்டை கொடுத்து பணம் கிடைக்கும் என்று ஏமாற்றி ஒருவரை வெற்றி பெறச் செய்தார். பின்னர் வெற்றி பெற்றவர் அந்தத் தொகுதிக்குச் சென்றபோது மக்கள் கல்லால் அடித்தார்கள். எனவே, இந்தத் தொகுதியில் பணியாற்றி வரும் செந்தில் பாலாஜியை மக்கள் நம்ப வேண்டாம்.

செந்தில் பாலாஜியின் யோசனை
எதிர்காலத்தில் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க போகிறவர் செந்தில் பாலாஜி தான். செந்தில் பாலாஜி இதுவரை 5 கட்சிக்கு மாறியவர். அவரின் யோசனையில் உருவானது தான் மக்களை பட்டியில் அடைப்பது. எனவே செந்தில் பாலாஜி பேச்சை நம்பி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications