அச்சுறுத்தும் கொரோனா.. ஈரோட்டில் திங்கள் முதல் கட்டுப்பாடுகள்.. மாலை 5 மணி வரையே கடைகள் இயங்கும்!
ஈரோடு: தமிழ்நாட்டில் கொரோனா சற்று அதிகரித்துள்ளதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஏற்கனவே கோவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் 09.08.2021 முதல் ஈரோட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளார்.

கடைகள் இயங்கும் நேரம்
* ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், அடுமனைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
* மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே 50 வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

டீக்கடைகளில் பார்சல்
* ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேனீர் கடைகளும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
* திருமணம் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், ஈமச்சடங்குகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.
* மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

கர்நாடகா எல்லையில் சோதனை
* ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.
* கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை சான்றிதழ் (அல்லது) கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டும், இல்லையெனில் சோதனைச்சாவடியிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

சனி மற்றும் ஞாயிறு முழு அடைப்பு
* பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகைகடை, காய்கறிக்கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.
*
ஈரோடு மாவட்டத்தில் வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றிட நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications