Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உடலுறவின் கொடூரம்.. 16 வயது பெண்ணின் கருமுட்டை.. 8 முறை நடந்த அநியாயம்.. இன்னொருவரும் சிக்கினார்

மகளின் கருமுட்டையை விற்று பணம் சம்பாதித்த தாய் மற்றும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பெற்ற மகளின் கருமுட்டைகளை விற்று, கள்ளக்காதல் ஜோடி ஒன்று உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளது.. ஈரோட்டில் நடந்த இந்த சம்பவம் இந்த 2 நாட்களாகவே, மக்களை கதிகலங்க வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

    Erode-ல் 16 வயது மகளின் கருமுட்டையை விற்று தின்ற தாய்..பகீர் பின்னணி | #TamilNadu

    ஈரோட்டில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 38 வயதாகிறது.. பெயர் சுமையா.. சேலத்தை சேர்ந்தவர்.. இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. ஆனால், கணவரை பிரிந்து, மகளுடன் வசித்து வருகிறார்..

    மகளுக்கு 3 வயது இருக்கும்போதே, கணவரை விட்டு தனியாக வந்துவிட்டார் சுமையா. அதே ஈரோட்டை சேர்ந்தவர்தான் அந்த பெயிண்ட்டர்.. அவர் பெயர் சையது அலி.. 40 வயதாகிறது..

    சையது அலி

    சையது அலி

    கள்ளக்காதல் இருவருக்குள்ளும் பற்றிக் கொண்டது.. இந்த ஜோடி பெரும்பாலும் ஒன்றாகவே குடித்தனம் நடத்தி வந்திருக்கிறது.. சையது அலி பெரிதாக எந்த வேலையும் செய்ய காணோம்.. ஆனால், வருமானத்துக்காக, கருமுட்டையை விற்கும் வேலைக்கு போயுள்ளார் சுமையா.. அந்த கருமுட்டையை தனியார் மருத்துவமனைகளில் கொண்டு போய் விற்று வந்துள்ளார். அதன் மூலம் இவருக்கு நிறைய பணம் கிடைத்துள்ளது..

    உல்லாசம்

    உல்லாசம்

    அந்த பணத்தில் கள்ளக்காதலனுடன் ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், 12 வயதில், மகள் வயதுக்கு வந்துள்ளார்.. உடனே, தன்னுடைய மகளின் கருமுட்டையையும் எடுத்து விற்க முடிவு செய்துள்ளார்.. இதற்காக, தன்னுடைய கள்ளக்காதலனை வைத்தே மகளை பலாத்காரமும் செய்ய வைத்துள்ளார் சுமையா.. 3 வயதில் இருந்து வளர்த்து வந்த குழந்தையை, சையத் அலி மிரட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.. அந்த 12 வயது மகளின், கருமுட்டையை எடுத்து கள்ளக்காதல் ஜோடி விற்றுள்ளது.

    கருமுட்டை

    கருமுட்டை

    12 வயது முதல் 16 வயது வரை பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.. இதற்கு உடன்பட மறுத்தால், அந்த பெண்ணை கொடூரமாக அடிப்பாராம் சையது அலி.. கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுவாராம்.. இப்படி பலமுறை பலாத்காரம் செய்தாலும், அதில், 8 முறை சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்று சாப்பிட்டுள்ளனர். ஒருகட்டத்தில் சையது அலியின் டார்ச்சர் தாங்கமல், வீட்டை விட்டு வெளியே சேலத்துக்கு ஓடிவிட்டடார் சிறுமி..

    20 வயது மகள்

    20 வயது மகள்


    அங்கு உறவினர்களிடம் தன்னுடைய சித்தி, சித்தப்பாவிடம் நடந்ததை எல்லாம் அழுதபடியே சொல்லி உள்ளார்.. இதை கேட்டு பதறிபோன குடும்பத்தினர், ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தனர்.. அந்த புகாரின்பேரியில், சுமையா, சையது அலி, மற்றும் புரோக்கர் மாலதி 3 பேரையும் போக்சோவில் கைதாகி உள்ளனர். 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பொதுவாக, பொதுவாக சிறுமிகளின் கருமுட்டை விற்கக்கூடாது என்பது சட்டம் உள்ளது.. அதற்காக 16 வயதாகும் பெண்ணுக்கு, 20 வயது என்று போலி டாக்குமெண்ட்டுகளை தயாரித்துள்ளார் சுமையா. ஆதார் அட்டையிலும் 20 வயது என்றே போலியாக தயாரித்துள்ளார்.

    புரோக்கர் மாலதி

    புரோக்கர் மாலதி

    பிறகு, இந்த கருமுட்டையை விற்பதற்காக ஒரு புரோக்கரை நியமித்துள்ளார்.. அந்த புரோக்கர் பெயர் மாலதி.. அவருக்கு 36 வயதாகிறது.. இவர்தான் சுமையாவின் கருமுட்டையையும், மகளின் கருமுட்டையையும் கொண்டு போய், ஈரோடு, சேலம், ஓசூர், பெருந்துறை ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை செய்து வந்துள்ளார். இப்படி விற்றுவருவதற்கு ரூ.5 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளனர்.

    சுப்பிரமணியன்

    சுப்பிரமணியன்

    அதேபோல ஒரு கருமுட்டைக்கு 25 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்கள்.. இந்நிலையில், சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்வதற்காக போலி ஆவணம் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரை தற்போது கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்... இதனிடையே, சட்டவிரோதமாக கருமுட்டையை விற்பனை செய்தால் சம்மந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+