அண்ணிக்கு பாலியல் தொல்லை தந்த கொழுந்தன்.. கத்தியால் குத்தியதால் பரபரப்பு

அண்ணியை கொழுந்தன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அண்ணனிடம் தன்னை பற்றி போட்டு கொடுத்த அண்ணியை சரவணன் என்பவர் சரமாரியாக தாக்கியதுடன், தன்னையும் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபிசெட்டி பாளையம் அருகே டிஎன்.பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதி தேவராஜ் - அன்னக்கொடி. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். அன்னக்கொடிக்கு வயசு 36. தேவராஜுக்கு சரவணன் என்ற 33 வயதுடைய ஒரு தம்பி உள்ளார். அவர் அதே பகுதியில் தன் அம்மாவுடன் வசித்து வருகிறார்.

Young man arrested for sexual torture his sister in law

ஆனால் அன்னக்கொடியின், சரவணன் அடிக்கடி பாலியல் ரீதியில் தவறாக பேசியதாக தெரிகிறது. இதனை தேவராஜிடம் அன்னக்கொடி முறையிடவும், சரவணனை கூப்பிட்டு தேவராஜ் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கவுந்தப்பாடி வேலம்பாளையத்தில் உள்ள தன் அம்மா வீட்டுக்கு அன்னக்கொடி மகனுடன் சென்றிருந்தார். அங்கிருந்து கொண்டே வரப்பள்ளத்தில் உள்ள ஒரு பள்ளியில் மகனை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தும், அழைத்து வந்தும் கொண்டிருந்தார்.

இந்த விஷயம் சரவணனுக்கு தெரியவரவும், வரப்பள்ளம் பஸ் ஸ்டாப்பில் அண்ணிக்காக காத்திருந்தார். ஸ்கூலில் இருந்து மகனை அன்னக்கொடி கூட்டி வருவதை பார்த்த சரவணன், மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிறு, மார்பு என பல இடங்களில் சரமாரி குத்தினார்.

இதில் அன்னக்கொடி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் ஓடிவருவதற்குள், சரவணன் கையில் வைத்திருந்த கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டு காயம் அடைந்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் இருவரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். உண்மையிலேயே அண்ணிக்கு பாலியல் ரீதியாக ஏதேனும் சரவணன் தவறாக பேசினாரா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பங்களாபுதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிகிச்சை முடிந்த பின்னரே உண்மை காரணம் தெரிய வருவதுடன், சரவணனும் கைதாவார் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+