For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறுகிய நேரத்தில் 4 லட்சம் பேருக்கு மேல் ரெஜிஸ்டர் செய்த நாட்டின் மிக பெரிய கின்னஸ் சாதனை முயற்சி

சென்னை ஐஐடி-இன் ஸ்டார்ட்அப் நிறுவனமான GUVI, கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஆன்லைன் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகிறது.

Recommended Video

    குறுகிய நேரத்தில் 4 லட்சம் பேருக்கு மேல் ரெஜிஸ்டர் செய்த நாட்டின் மிக பெரிய கின்னஸ் சாதனை முயற்சி

    ஏப்ரல் 24, மாலை 6 முதல் ஏப்ரல் 25, மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி முகாமில் சேர எந்த ஒரு முன் நிபந்தனையும் கிடையாது. 8 வயது முதல் 80 வயது வரை உள்ள புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வமுடைய எவர் வேண்டுமானாலும் சேரலாம்.

    பள்ளி மாணவர்கள், புதிய பட்டதாரிகள், எந்த துறையிலும் வேலை செய்பவர்கள் என அனைவரும் சேர்ந்து பயிற்சி பெறலாம். செயற்கை நுண்ணறிவில் 100 கோடி இந்தியர்களின் அறிவை மேம்படுத்துவதும் இந்த துறையில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றுவதுமே GUVI in AI-FOR-INDIA முயற்சியின் நோக்கமாக உள்ளது.

    இந்த ஒரு நாள் பயிற்சி நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் Python Program பயன்படுத்தி முகம் அடையாளம் காணும் செயலியை (face recognition application) உருவாக்குவது குறித்து கற்றுக்கொள்ளலாம்.

    இதில் கலந்து கொள்ளப் பதிவுசெய்யும் அனைவரும் Python- இன் அடிப்படைகளை தெரிந்து கொள்ள GUVIஇன் பாடங்களை இலவசமாகப் பெறுவார்கள். Python-இன் பயன்பாடு கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 456% அதிகரித்துள்ளது.

    இந்த நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கு இலவச சான்றிதழ்களும் 200 டாலர் மதிப்புள்ள GItHub Student Pack-இன் அக்சஸ் இலவசமாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சி தொழில்நுட்பக் கல்விக்கான தேசிய அளவிலான கவுன்சிலான AICTE உடன் இணைந்து நடத்தப்படுகிறது.

    மேலும், இதை மருத்துவ ஆட்டோமேஷன் தளமான BUDDI.AI நிறுவனமும் இணைந்து நடத்துகிறது

    AI-For-India மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கலந்துகொள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே ஆன்லைன் முன்பதிவு செய்துள்ளனர். இதில் கலந்துகொள்ள விரும்பும் ஒருவர் GUVIஇன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அவர்களின் வசதிக்கான நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.மேலும், இந்த நிகழ்வு 24 மணி நேரத்தில் அதிக பேர் கலந்துகொண்ட ஆன்லைன் பயிற்சி முகாம் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைக்கும் ஒரு முயற்சியாகும்.

    இது குறித்து GUVIஇன் தலைமை இயக்க அதிகாரி அருண் பிரகாஷ் கூறுகையில், "இந்த முயற்சி GUVIஇன் இணை நிறுவனர் ஸ்ரீதேவி அருண் பிரகாஷின் நினைவாக நடத்தப்படுகிறது. அவர் ஒரு தேசத்தை முன்னேற்றுவதற்கான ஒரே வழி கல்வி என்று உறுதியாக நம்பினார். ஒவ்வொரு காலத்திலும் உலகம் வெவ்வேறு புரட்சிகளைக் காண்கிறது. தற்போது, ​​நாம் AI புரட்சியில் உள்ளோம். இதில் கலந்துகொள்ள நீங்கள் ஒரு Developer ஆக இருக்கத் தேவையில்லை, ஆனால் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா, அதற்கு நீங்கள் இதில் கலந்துகொள்ள வேண்டும்" என்றார்

    இது குறித்து GUVIஇன் தலைமை செயல் அதிகாரி பாலா கூறுகையில், AI-For-India என்பது கற்றல் திறனுக்கு அப்பால் Programming குறித்த புரிதல்களை முன்னெடுக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு Program தொடர்பான அடிப்படை புரிதல்களை ஏற்படுத்தி, படைப்பாற்றல் திறனை மேம்படுத்த முடியும். இந்த இலக்கை அடைவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம் என்று கூறினார்.

    நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள்: AI for India 1.o என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஆன்லைன் நிகழ்ச்சியாகும். இதில் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள், ஏற்கனவே வேலை செய்து வருபவர்கள், வேலை தேடுபவர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்

    இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் https://www.guvi.in/AI-for-India என்ற தளத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு வகுப்பும் 90 நிமிடங்கள் வரை நடைபெறும்

    10 லட்சம் பேர் கலந்து கொள்ள போகும் இந்த நிகழ்வில் நீங்களும் கலந்து கொள்ள https://www.guvi.in/AI-for-India என்ற இணையதளத்தில் ரெஜிஸ்டர் (பதிவு) செய்யவும்.

     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X