For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 வயதில் இத்தனை கொடுமையா.. அரிய வகை நோயில் சிக்கித் தவிக்கும் யார்ல்நிலா.. உதவுங்கள் ஈர மனதுடன்!

சென்னை: வெறும் 2 வயதான யர்ல்னிலா என்ற சிறுமி, Opsoclonus Myoclonus Ataxia Syndrome என்ற அரியவகை நோயால் அவதிப்படுகிறார்.
ஆனால் அந்த சிறுமியின் சிகிச்சையைத் தொடர அவளுடைய பெற்றோரிடம் பணம் இல்லை, உங்கள் உதவி தேவை.

ரகுபதி மட்டுமே அவர் குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டும் மனிதர். தினக் கூலிக்கு வேலை செய்வதன் மூலம் சொற்ப அளவுக்கு சம்பாதிக்கிறார். இவரது மனைவி சுசீலா, தன்னுடை இரண்டு குழந்தைகளை வீட்டில் இருந்தபடி கவனித்து வருகிறார்.

Help this 2 year old girl child for her treatment

அந்த குடும்பம், தங்களுக்குக் கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாகதான் இருந்தனர். யர்ல்னிலா தனது பெற்றோரின் கஷ்டத்தைப் பார்த்துதான் வளர்ந்தார். அவர்கள் தங்கள் மகள்களுக்காக சிறிய அளவு உணவை மட்டுமே சமைத்து கொடுத்துவிட்டு, பசியுடன் தூங்கிய நாட்கள் இருந்தன.

"நான் கஷ்டப்பட்டு படிப்பேன், அதன் மூலமாக நான் ஒரு நல்ல வேலைக்கு போவேன். பட்டினி இன்றி என் பெற்றோரை கவனித்துக்கொள்வேன்," என்று யர்ல்னிலா அவ்வப்போது நினைப்பார்.

Help this 2 year old girl child for her treatment

ஆனால், அடிக்கடி, யர்ல்னிலா நோய்வாய்ப்படத் தொடங்கியபோது அவரது கனவு கலைந்து போனது.

யர்ல்னிலாவை அவர் பெற்றோர் முதலில் அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றனர். அவருக்கு Opsoclonus Myoclonus Ataxia Syndrome (ஒப்சோக்ளோனஸ் மயோக்ளோனஸ் அட்டாக்ஸியா நோய்) அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

அதற்காக மருத்துவம் எளிதில் கிடைக்கவில்லை. முதல் ஊசிக்கு 60,000 ரூபாய் செலவிட்டனர். ஆனாலும் சிறுமி பல சிகிச்சைகளுக்குப் பிறகும், முழுமையாக குணமடையவில்லை.

Help this 2 year old girl child for her treatment

எனவே, சமீபத்தில் சிறுமியை கே.ஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு 4 வார இடைவெளியில் 40 கிராம் 3 டோஸ் - இன்ட்ரெவனஸ் இம்யூனோகுளோபுலின் கொடுத்து போதுமான அளவு குணமடைய முடியும் என்று மருத்துவர்கள் அறுவுறுத்தினர்.

இதற்கு சுமார் ரூ. 180000 செலவாகும். எனவே, உங்களால் முடிந்த உதவியை இந்த சிறுமிக்கு செய்து, அவர் குணமடைய உதவுங்களேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X