இதய அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லை.. உயிருக்கு போராடும் சிறுமி.. கொஞ்சம் உதவுங்களேன்!
இதய அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடும் சிறுமி சுமையா காதூனுக்கு நீங்கள் நினைத்தால் உதவலாம்!
சென்னை: இதய அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடும் சிறுமி சுமையா காதூனுக்கு நீங்கள் நினைத்தால் உதவலாம்!
முகமது அன்சார் மற்றும் அவரின் மனைவி ரூபி காதூன் பீகாரில் உள்ள காட்டியார் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கல்வி அறிவு இல்லாதவர்கள். ரூபி காதூன் பீகாரி மட்டுமே பேசக்கூடியவர். முகமது அன்சார் சென்னையில்தான் வேலை பார்க்கிறார்.
அவருக்கு தமிழ் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பேச தெரியாது. அவர் சமையல் மாஸ்டராக பணிபுரிகிறார். கிழக்கு முகப்பேரில் அவர் பணிபுரிந்து வருகிறார். இவர்களின் இரண்டாவது மகள் சுமையா காதூன் பிறந்ததில் இருந்தே நிறைய சிரமங்களை அனுபவித்து வருகிறார்.
அந்த குழந்தையால் பிறந்ததில் இருந்து சரியாக தூங்க முடியவில்லை, சரியாக பால் குடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சுமையாவிற்கு செய்யப்பட்ட மருத்துவ சோதனையில், அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிந்தது. இதனால் அவர்கள் பீகாரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சோதனை செய்தனர்,
அவர்களின் அறிவுரையின் பெயரில் கடைசியில் வேலூரில் உள்ள வேலூர் மருத்துவமனையில் சுமையாவை சேர்த்தனர். இந்த நிலையில் சுமையாவுடன் அவளின் பெற்றோர்களும் வேலூருக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். ஆனால் அங்கும் கூட சுமையாவின் சிகிச்சைக்கு அன்சாரிடம் காசு இல்லை.
அவளின் இதயத்தில் சிகிச்சை செய்ய அவளின் பெற்றோரிடம் கொஞ்சம் கூட காசு இல்லை. உடனே இதய அறுவை சிகிச்சை செய்தால்தான் அவள் பிழைப்பாள் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த நிலையில் சுமையாவின் அப்பா அன்சார் பணியாற்றிய கடையின் ஓனர் சுரேஷ் சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறார்.
சுரேஷ் வழிகாட்டுதலின் படி சென்னை மியாட் மருத்துவமனையில் சுமையா சேர்க்கப்பட்டார். தற்போது அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்ய 3.50 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். நீங்கள் நினைத்தால் இந்த சிறுமிக்கு உதவலாம்.
உங்களால் முடிந்த பணத்தை இந்த சிகிச்சைக்கு கொடுத்து, இந்த சிறுமிக்கு உதவிடுங்கள். இந்த சிறுமிக்கு உதவ இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் பணம் அனுப்பிடலாம்!
-
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்?















Click it and Unblock the Notifications