பென்ஸ் கார் பலாத்காரம்! வசமாய் சிக்கிய ‘புள்ளி’..! 5 பேரில் 3 சின்னப்பசங்க வேற! திடுக்கிட்ட போலீசார்

Subscribe to Oneindia Tamil

ஹைதரபாத் : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3 சிறுவர்களும் அடங்குவர் என தெலுங்கானா போலீசார் கூறியுள்ளனர்.

தெலுங்கானா தலைநகரான ஹைதரபாத் நகரின் மையப்பகுதியில் தான் அரசியல்வாதிகளின் வாரிசுகளால் இந்த சொகுசு காருக்குள் வைத்து இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் தெலுங்கானா உள்துறை அமைச்சரின் பேரனுக்கு இதில் தொடர்பில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்சில் பென்ஸ் சொகுசு காருக்குள் வைத்து 17 வயது சிறுமியை அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பங்களை சேர்ந்த 5 சிறுவர்கள் 5 கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்


கடந்த மே 28 அன்று 17 வயதான சிறுமி 5 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட சிறுமி அங்குள்ள பப்பிற்கு 5 சிறுவர்களுடன் வந்துள்ளார். நிகழ்ச்சி முடிந்து சிறுமியை வீட்டிற்கு கொண்டு சென்றுவிடுவதாக கூறி கூட வந்த 5 சிறுவர்கள் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏற்றியுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அந்த சிறுமியை காருக்குள்ளேயே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியுள்ளனர். கூடுதலாக கிடைத்துள்ள தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 பேரில் ஒருவன் எம்எல்ஏ மகன் என்பதும் மற்றொருவன் சிறுபான்மை கட்சி தலைவரின் மகன் என்பதும் தெரிய வந்துள்ளது.

 சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தெலுங்கானா போலீசார்" பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றவாளிகள் பற்றி எதையும் வெளிப்படுத்த முடியாது. ஆனல் அவர்களில் ஒரு பெயரை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளோம். குற்றவாளிகளை கைது செய்ய உடனடியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அறிக்கையின்படி நாங்கள் ஐந்து குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம் என போலீஸ் அதிகாரி ஜோயல் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

 ஒருவர் கைது

ஒருவர் கைது

சிறுமியின் தந்தையின் புகாரின் அடிப்படையில் போலீசார் ஆரம்பத்தில் மூர்க்கத்தனமான தாக்குதல் என வழக்கை பதிவு செய்தனர். பின்னர் அது பலாத்கார வழக்காக மாற்றப்பட்டது. இந்நிலையில் காருக்குள் 17 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட ஐந்து பேரில், மூன்று பேர் சிறார்கள் எனவும், அதில் உள்துறை அமைச்சரின் பேரனுக்கு தொடர்பில்லை என போலீசார் தெரிவித்தனர்.

 பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

இந்நிலையில் தெலங்கானா மைச்சர் கேடி ராமராவ், மாநில உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி ஆகியோர் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வழக்கில் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட வேண்டாம் என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரத்தை கையிலெடுத்து போராடிய பாஜகவினரை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில், இது தொடர்பாக போராட்டம் தொடரும் என அக்கட்சியினர் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+