Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முத்து" பட எஜமான்.. நடிகர் சரத்பாபு காலமானார்.. ரசிகர்கள் சோகம்

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சரத் பாபு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் சரத் பாபு (வயது 71). மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் என்ற படத்தில் 1971 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் சரத் பாபு அறிமுகம் ஆனார். சுமார் 40 ஆண்டு காலமாக 200-க்கும் மேற்பட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் சரத் பாபு நடித்துள்ளார்.

 Actor Sarath Babu who was undergoing treatment in Hyderabad hospital passed away

ஹீரோக்களுக்கு நண்பர், வெளிநாட்டில் இருந்து வரும் பணக்காரர், வசதி படைத்த நபர் போன்ற கேரக்டர்களில் சரத்பாபு கன கச்சிதமாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் அண்ணாமலை படத்தில், ரஜினியின் பணக்கார நண்பனாக நடித்து இருக்கும் சரத்பாபு.. அசோக் ஆகவே வாழ்ந்து இருப்பார். அதுபோக முத்து படத்திலும் பணக்கார எஜமானாக சரத்பாபு அவ்வளவு பொருத்தமாக நடித்து இருப்பார்.

இந்த படங்கள் எல்லாம் மிகப்பெரும் ஹிட் அடித்ததோடு சரத் பாபுவிற்கும் பெரும் புகழை தேடிக்கொடுத்தது. தமிழ், தெலுங்கு மட்டும் இன்றி கன்னடா, இந்தி , மலையாள படங்களிலும் சரத்பாபு நடித்துள்ளார். நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், பகல்நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு போன்ற பல ஹிட் அடித்த படங்களில் நடித்துள்ளார்.

71 வயதான சரத் பாபு கடந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டது . செயற்கை சுவாசம் மூலம் ஒரு மாதத்திற்கு மேலாகவே மருத்துவ மனையில் சரத்பாபுவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செப்சிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்ட சரத் பாபுவிற்கு உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

 Actor Sarath Babu who was undergoing treatment in Hyderabad hospital passed away

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சரத்பாபு உயிரிழந்தார். சரத்பாபுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழில் பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தில் நடிகர் சரத்பாபு நடித்து இருந்தார். இதுவே அவரது கடைசி படம் ஆகும். ஆந்திர பிரதேசத்தில் உள்ள அம்தலவல்சா பகுதியில் பிறந்த சரத் பாபுவின் இயற்பெயர் சத்யநாராயண திக்‌ஷித் என்பதாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+