திடீரென புஷ்பா வீட்டுக்குள் நுழைந்த ரோஜா.. குழந்தையை அப்படியே வாரியணைத்து.. ஆந்திர ஆனந்தம்..!
நடிகை ரோஜா, புஷ்பாவின் குழந்தையை தூக்கி கொஞ்சினார்
ஹைதராபாத்: புஷ்பா வீட்டுக்குள் நுழைந்ததுமே, குழந்தையை அப்படியே வாரி அணைத்து கொண்டார் ரோஜா.. ஆந்திராவில் அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது..!
ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவையில் உள்ளவர் புஷ்பா ஸ்ரீவாணி.. பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.. மாநிலத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் இவரும் ஒருத்தர்... அதுமட்டுமல்ல, நாட்டின் மிக இளம் வயது துணை முதலமைச்சர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
புஷ்பாவுக்கு 34 வயதாகிறது.. அமராவதி மாவட்டம் போலவரத்தில் வசித்து வருகிறார். அறிவியல் டிகிரி படித்துள்ளார்.. கல்வியியலிலும் பட்டம் வாங்கி உள்ளார்..

டிக்டாக் வீடியோ
சமூக அக்கறை நிறைந்தவர்.. குருபாம் தொகுதியில் கணக்கற்ற பல சமூக பணிகளில் ஈடுபட்டவர்.. அதன்மூலம் அந்த தொகுதி மக்களின் பாராட்டை நேரடியாக பெற்றவர்.. வெகு சீக்கிரத்திலேயே புஷ்பாவின் பெயர் சோஷியல் மீடியாவில் பரவியது.. அப்படித்தான் ஜெகன் மோகனின் கவனத்துக்கும் சென்றது... இவர் நன்றாக டிக்டாக் வீடியோ செய்வார்.. ஜெகன் மோகன் குறித்து இவர் பாடிய பாட்டு, இப்போதும் டிக்டாக்கில் செம ஃபேமஸ் ஆக உள்ளது.. இதற்கு பிறகுதான் மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைந்தார்.

உழைப்பு
தன் கடின உழைப்பால் அரசியலில் நுழைந்து எம்எல்ஏவாகி, இப்போது துணை முதல்வராக உயர்ந்துள்ளார். விழியநகரம் மாவட்டத்தில் உள்ள குருபாம் சட்டப்பேரவை தொகுதியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்.. இவர் கணவர் பெயர் சத்ருசர்லா பரிக்சித் ராஜு.. ஆனால், இவர்களுக்கு இவ்வளவு நாள் குழந்தை இல்லை.. இப்போதுதான் பிறந்துள்ளது..

பதவி
அதாவது பதவியிலிருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொண்ட துணைமுதலமைச்சர் என்ற பெயரை தான் புஷ்பா பெற்றுள்ளார்.. இதனால், புஷ்பாவுக்கு முதலமைச்சர் ஜெகன் மோகனும் அவரின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் சக அமைச்சர்களும் போனில் அவருரக்கு வாழ்த்து மேல் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

அரசியல்வாதி
இதில் நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா ஒரு படி மேலே சென்று, புஷ்பா வீட்டுக்குள்ளேயே நுழைந்துவிட்டார்.. குழந்தை பெற்றுள்ள புஷ்பாவை கட்டியணைத்து வாழ்த்து சொன்னார்.. குழந்தையை தூக்கி ஆசை தீர கொஞ்சினார்.. ரோஜா குழந்தையை கொஞ்சும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications