ஹைதராபாத் அருகே இன்று காலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவு.. டெல்லியிலும் நில அதிர்வு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே திங்கள்கிழமை காலை ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை இந்திய நில அதிர்வு அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.

தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து தெற்கே 156 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

An earthquake measuring 4 on the Richter scale struck near the Hyderabad

இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்த நிலநடுக்கம் காரணமாக, அதிருஷ்டவசமாக, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் சம்பவங்கள் பதிவான நிலையில், தென்னிந்தியாவில் ஹைதராபாத்துக்கு தென் பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது தென் மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே, டெல்லியில் இன்று காலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் இயங்கும் போது நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆபத்தை தவிர்ப்பதற்காக அது மெதுவாக இயக்கப்பட்டு அடுத்த ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவ் வெளியாகியுள்ளது. பிறகு ரயிலில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது பரிசோதித்து பார்க்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+