முந்திக்கிட்ட ஆந்திரா.. மின்சார விலை ரூ.35-ஐ தொட்டது ஏன்? தமிழகத்தில் தவறு எங்கே நடந்தது?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது.. ஆனால், பக்கத்து மாநிலமான ஆந்திராவிலோ ரூ.16 முதல் ரூ.20 வரைதான் விலை! ஒரே மின்சாரத்துக்கு ஏன் இவ்வளவு வித்தியாசம்? தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தைப் பார்ப்போம்..

வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் என எல்லா இடங்களிலும் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்தத் தேவையை சமாளிக்க தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற இடங்களில் இருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது.

Andhra Pradesh Electricity Price

ஆனால், சில நேரங்களில் தேவை அதிகமாகிவிடும். குறிப்பாக மாலை நேரத்தில் நிறைய பேர் வீடுகளில் மின்சாரத்தை பயன்படுத்துவார்கள். அப்போது கூடுதல் மின்சாரம் தேவைப்படும். நம்மிடம் இருக்கும் மின்சாரம் போதவில்லை என்றால், வெளியே வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.

அப்படித்தான் அக்டோபர் மாத தேவைக்காக தமிழக மின்வாரியம் கூடுதல் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அக்டோபர் 12 முதல் 31-ம் தேதி வரையிலான தேவைக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு யூனிட் ரூ.35

மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் மின்சாரம் வாங்க ஒரு யூனிட்டுக்கு ரூ.33.37 முதல் ரூ.37 வரை விலை கேட்கப்பட்டுள்ளது. இதில் 181 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.35 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி வரையிலான மின்சார தேவைக்கும் ஒரு யூனிட்டுக்கு ரூ.31.99 முதல் ரூ.34.49 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கேதான் ஆந்திராவின் விலை கவனத்தை ஈர்க்கிறது.. அந்த மாநிலம் அக்டோபர் மாதத் தேவைக்காக 150 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.20 வரை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆந்திராவுக்கு குறைந்த விலை

தமிழகத்தைவிட ஆந்திராவுக்கு குறைந்த விலைக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது, மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நேரம்.. அதாவது ஆந்திரா செப்டம்பர் 9-ம் தேதியே ஏலத்தை முடித்துவிட்டது. தமிழகமோ அக்டோபர் மாதத் தேவைக்கான ஏலத்தை அதற்கு பிறகுதான் கோரியது.

மின்சாரம் தேவைப்படும் நேரத்தில் அவசரமாக வாங்கும்போது அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்... முன்கூட்டியே திட்டமிட்டு ஒப்பந்தம் செய்திருந்தால் குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்கிறார்கள்.

தமிழகத்தில் மின்தேவை அதிகரித்தது ஏன்?

இந்நிலையில்தான், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் பேட்டி கவனம் பெறுகிறது.. :"கடந்த வருடம் இதே காலத்தில் தமிழகத்தின் அதிகபட்ச மின்தேவை சுமார் 16,800 மெகாவாட்டாக இருந்தது. இந்த வருடம் அது 21,700 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் மின்சாரத் தேவை அதிகமாகியுள்ளது.

அதே நேரத்தில், காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரமும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை, மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கூடுதல் மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்முதலால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.. ஆனால், இந்த அதிக விலை நிரந்தரமானது அல்ல என்றும், மின்வெட்டு ஏற்படாமல் இருக்கவே தற்காலிகமாக மின்சாரம் வாங்கப்படுகிறது" என்று விளக்கம் தந்துள்ளார்.

எனினும், மின்சாரம் அதிகம் தேவைப்படும் காலம் முன்கூட்டியே தெரிந்திருக்கும்போது, தமிழகத்தால் ஏன் ஆந்திராவைப் போல குறைந்த விலையில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை????

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+