தனியே... தன்னந்தனியே... தெலுங்கானாவில் 17 லோக்சபா தொகுதிகளில் தனித்து போட்டி.. பாஜக அறிவிப்பு
ஐதராபாத்:தெலுங்கானாவில் 17 லோக்சபா தொதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது.
தெலுங்கானா மாநில பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பண்டாரு தத்தாரேயா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்தில் பாஜக தனியாகவே 17 தொகுதிகளிலும் போட்டியிடும். மாநிலத் தேர்தல் என்பது லோக்சபா தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது தான் சட்சபை தேர்தல். வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.
நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக பணியாற்றி வருகிறது. பிரதமர் மோடி ஊழலற்ற அரசை கொடுத்துள்ளார்.
அவருடைய செல்வாக்கு முன்பை விட அதிகரித்துள்ளது. மோடியை விமர்சிக்கும் தலைவர் ஊழல் செய்தவர்களாக இருப்பார் அல்லது சிறுபான்மையினர் வாக்குகளுக்காக பணியாற்றுபவர்களாக இருப்பார்கள்.
விவசாயிகளின் வங்கி கணக்குகளில் மத்திய அரசு நேரிடையாக பணத்தை அளிக்கிறது. ஆனால், தெலுங்கானா அரசோ.. அதனை காசோலையாக வழங்குகிறது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
