Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹைதராபாத்தில் கணவனுக்கு கடைசி புத்தாண்டு பார்ட்டி.. காதலனுக்காக பரலோகம் அனுப்பி வைத்த மனைவி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மீர்பேட் அருகே கணவன் காணாமல் போன நிலையில், போலீஸில் புகார் அளிக்கவே இல்லை. ஆனால் அவரது உடல் ஹைதராபாத்தின் மீர்பேட் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 2-ந்தேதி மீட்கப்பட்டது. மனைவியை பிடித்த விசாரித்த போது, கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. புத்தாண்டு தினத்தில் பார்ட்டி என்ற பெயரில் குடிக்க வைத்து கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டது தெரியவந்தது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் மீர்பேட் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. இறந்த உடலை மீட்டு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அதே பகுதியில் வசித்து வந்த நாராயண பெஹரா (வயது 32) என்பது தெரியவந்தது. மர்ம மரணம் என்ற வகையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார், அவருக்கு பந்திதா (வயது 27) என்ற மனைவி இருப்பதை கண்டுபிடித்தார்கள்.

In Hyderabad a wife who give a last New Year s party for her husband faced an unexpected twist

மீர்பேட் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார் பந்திதா. ஒடிசாவை சேர்ந்த இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறார். பந்திதா, தனது கணவர் மாயமானது குறித்து ஏன்போலீசில் புகார் செய்யவில்லை, அவரை எப்போதிருந்து காணவில்லை, உங்களிடம் கடைசியாக எப்போது தொடர்பு கொண்டார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் கேட்டுள்ளார். அப்படி போலீசார் நடத்திய விசாரணையின் போது, பந்திதா, முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறியிருக்கிறார்.

இதனால் பந்திதா மீது போலீசாரின் சந்தேகம் அதிகமானது. இதனால் தங்கள் பிடியை இறுக்கி துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது கணவரை தானே தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததை பந்திதா ஒப்புக் கொண்டார். ஏன் கொலை செய்தார் என கேட்டபோது, தனக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் வித்யாசாகருக்கும் இருந்த கள்ளக்காதல் விகாரத்தை தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து இளைஞரின் மர்ம மரணம் கொலை வழக்காக மாற்றி கள்ளக்காதல் விவகாரத்துடன் சேர்த்து விசாரித்தனர் அபப்போது பந்திதா கூறுகையில், "பீகாரை சேர்ந்த 25 வயதாகும் வித்யாசாகர் வெல்டராக வேலை பார்க்கிறார். ஒரே பகுதியில் அருகருகே வசித்த அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும்போது இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்கள். ஆனால் அடிக்கடி சந்தித்து பேச கணவர் இடையூறாக இருந்தாராம். அவருக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பந்திதா கள்ளக்காதலனிடம் தனது பயத்தை தெரிவித்துள்ளார்.

இதனால் இருவரும் சேர்ந்து நாராயணாவை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டி உள்ளார்கள். இதற்காக புத்தாண்டு தினத்தில் பார்ட்டி என்ற பெயரில் நாராயணாவை அழைத்து வித்யாசாகர் குடிக்க வைத்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய நாராயணாவுடன், பந்திதா வேண்டுமென்றே சண்டைபோடுவதுபோல தகராறு செய்து கணவரை வம்புக்கு இழுத்து இரும்பு கம்பியால் தலையில் தாக்கினாராம்.

அந்த சமயம் வீட்டுக்கு அருகே பதுங்கியிருந்த வித்யாசாகரும் வந்து சேர்ந்து தாக்கி நாராயணாவை கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை இருவரும் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கொண்டு போட்டார்களாம். இந்த தகவலை வாக்குமூலமாக பந்திதாக கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், பந்திதாவும், அவரது கள்ளக்காதலன் வித்யாசாகரும் ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+