லிவிங் டுகெதர்.. நாலே மாசத்தில் சின்னாபின்னமான பால்காரர்.. போற போக்கில் சீதா செய்த காரியம்.. ஓ காட்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்த பால்காரரின் நிலைமை பரிதாபமாகிவிட்டது.. இப்போது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.. என்ன நடந்தது?

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது தொரகுடிப்படு என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் விஜய்குமார் யாதவ்.. இவர் ஒரு விவசாயி ஆவார்.. அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

Living Together woman Andhra Pradesh

பால் வியாபாரி: விஜய்குமாருக்கு திருமணமாகிவிட்டது.. இவரது மனைவி, குழந்தைகள் எல்லாம் சொந்த ஊரில் இருக்கிறார்கள்.. பிழைப்பு தேடி ஆந்திராவுக்கு வந்தவர், அங்கேயே தங்கியிருந்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவருடன் சீதா குமாரி என்ற பெண்ணும் வசித்து வந்தார்.. சீதா குமாரிக்கு திருமணமாகவில்லை.. இருவருமே பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், ஒரே வீட்டில் லிவிங் டூ கெதராக இருவருமே வாழ்ந்து வந்தனர்.. சமீபத்தில்தான் இவர்களுக்கு பழக்கமாகியிருக்கிறது.. எனவே, கடந்த 4 மாதங்களாகவே லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

சீதாகுமாரி: சொந்த ஊரிலுள்ள தன்னுடைய குடும்பத்துக்கு, மாத மாதம் பணம் அனுப்பி வந்துள்ளார் விஜய்குமார்.. இது சீதா குமாரிக்கு பிடிக்கவில்லை.. மனைவிக்கு பணம் தருவது சீதாகுமாரிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விஜய்குமாரிடம் பல முறை வாக்குவாதமும் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு விஜய் குமார் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார். அப்போது சீதா குமாரி அவரது கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, அவரது அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளார்.. பிறகு விஜய்குமாரின் மொபைல் போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.. ஆனால், செல்லும் வழியில், வீட்டின் உரிமையாளரை சந்தித்து, விஜய்குமார் தாக்கப்பட்ட தகவலையும் சொல்லிவிட்டு, போயிருக்கிறார் சீதாகுமாரி.

யாரந்த பெண்: இதைக்கேட்டு பதறிப்போன ஹவுஸ் ஓனர் விரைந்து வந்து, கட்டிலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜய்குமாரை மீட்டு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். விஜய்குமாருக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.. சீதா குமாரி எங்கே போனார்? அவர் யார்? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+