பாஜகவுக்கு ‛செக்’.. தேசிய அரசியலில் சந்திரசேகர ராவ்.. தசராவில் புதிய கட்சி.. பெயர் இதுதானாம்
ஐதராபாத்: தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புதிதாக அணி உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அக்டோபர் 5ம் தேதி தசரா தினத்தில் புதிய கட்சியை அறிவிக்க உள்ளார். கட்சியின் பெயர் உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக சந்திர சேகரராவ் உள்ளார். ஒரு காலத்தில் பாஜக-தெலங்கானா ராஷ்டரிய சமீதி கட்சி கூட்டணியில் இருந்தது. ஆனால் தற்போது இருகட்சிகள் இடையே கடும் வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. அதோடு பிரதமர் மோடி உடனான சந்திப்பையும் சந்திர சேகரராவ் தவிர்த்து வருகிறார்.
மேலும் சந்திரசேகரராவ் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான பணியை அவர் தொடங்கி உள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசி வருகிறார்.

நிதிஷ் குமாருடன் சந்திப்பு
சில மாதங்களுக்கு முன்பு சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரேவை சந்திரசேகரராவ் சந்தித்தார். அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பீகார் முதல் அமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரை சந்தித்து பேசினார். இதேபோல் இன்னும் பிற எதிர்க்கட்சி தலைவர்களை சந்திரசேகரராவ் சந்தித்து பேச உள்ளார். அதோடு 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக சந்திரசேகரராவ் விரைவில் புதிய கட்சி துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தசரா தினத்தில் புதிய கட்சி
சந்திரசேகரராவின் இந்த புதிய கட்சி அறிவிப்பு என்பது கடந்த ஏப்ரலில் வெளியாகும் என எதிர்கபார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிப்போனது. இந்நிலையில் தான் புதிய கட்சியை தசரா தினமான அக்டோபர் மாதம் 5ம் தேதி சந்திரசேகரராவ் அறிவிக்க வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் பெயர் என்ன?
மேலும் சந்திர சேகரராவ் தேசிய அரசியலுக்காக கட்சி துவங்குவதால் அதற்கு ‛பாரத் ராஷ்ட்ர சமீதி' (Bharat Rashtra Samithi or BRS) என்ற பெயரில் கட்சி துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுதெடார்பாக விவாதித்து இன்னும் 2 வாரத்துக்குள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த திட்டம் என்ன?
தேசிய அரசியலுக்காக புதிய கட்சியை அடுத்த மாதம் துவங்கினாலும் கூட சந்திரசேகரராவ் தொடர்ந்து தெலங்கானா முதல் அமைச்சராக இருப்பார். அதன்பிறகு 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது சந்திரசேகரராவ் அதில் போட்டியிட்டு தேசிய அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியை புதிய கட்சியான ‛பாரத் ராஷ்ட்ர சமீதி' உடன் இணைக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications