Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல்ஹாசன் புத்திசாலித்தனமானவர்.. திடீரென்று பாராட்டிய பவன் கல்யாண்.. பின்னணியில் ஆஸ்கர் தேர்வு குழு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛நடிகர் கமல்ஹாசன் ஒரு நடிகன் என்பதை தாண்டி மேலானவர். சினிமாவில் அவர் 60 ஆண்டுகள் பங்களிப்பு செய்துள்ளார். அவர் நடிகன் என்பதை தாண்டி மேலானவர். இப்போது ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல்ஹாசன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது இந்திய திரைப்பட துறைக்கு பெருமை சேர்க்கும் தருணம் ''என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து கூறியுள்ளார்.

கமல்ஹாசன்.. தமிழில் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகன். தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். நடிகர் கமல்ஹாசன் பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் பத்ம பூஷன் விருதும் அவருக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.

oscar-selection-committee-member-pawan-kalyan-wishes-to-kamal-haasan

சினிமாவை பொறுத்தவரை உயர்ந்த விருதாக ஆஸ்கர் உள்ளது. ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.

இந்த விருதுக்கான படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருதுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியாவில் கமல்ஹாசனுடன் நடிகர் ஆயுஷ்மான் குரானா, படத் தயாரிப்பாளர் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கும் ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது

இந்த நிலையில் உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு குழுவில் இணையவுள்ள கமல்ஹாசன் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான நடிகர் பவன் கல்யாண், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ஆஸ்கர் விருதுக்கான குழுவில் பத்ம பூஷன் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம். சினிமாவில் 60 ஆண்டுகளாக கமல்ஹாசன் செய்த பங்களிப்பு என்பது ஒரு நடிகர் என்பதை தாண்டி மேலானவராக இருக்கிறார்.

திரைப்படங்களில் அவரது புத்திசாலித்தனம் மற்றும் பன்முக திறமை, கதை சொல்லும் திறமை, இயக்குநர் உள்பட பலதுறை வித்தகவர். அவர் இந்திய மற்றும் உலக சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். சினிமாவின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர். மேலும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+