யாத்திரைக்கு இடையே மந்திராலயம் மடத்திற்கு விசிட்.. அதுவும் வேஷ்டி அணிந்து.. நம்ம ராகுலா இது!
ஹைதராபாத்: ஆந்திராவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வேஷ்டி அணிந்தபடி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை செல்கிறார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபயணமாக ராகுல் காந்தி செல்கிறார்.

கன்னியாகுமரியில் தொடங்கினார்
பாரத் ஜோடோ யாத்திரையில் மொத்தம் ராகுல் காந்தி 3,500 கி.மீட்டர் நடக்கிறார். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக செல்லும் வகையில் ராகுலின் மொத்த பாத யாத்திரை பயண திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு ராகுல் காந்தி பாதயாத்திரையாக சென்றார். கேரளாவில் 19 நாட்கள் ராகுல் காந்தியின் பாத யாத்திரை நடைபெற்றது.

ஆந்திராவில் ஜோடா யாத்திரை
இதையடுத்து, கடந்த மாதம் 30 ஆம் தேதி கர்நாடகாவிற்கு ராகுலின் பாதயாத்திரை வந்தது. பாஜக ஆளும் மாநிலம் என்பதால் ராகுல் காந்தியின் கர்நாடக பாதயாத்திரை கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. கர்நாடகாவில் 15 நாட்கள் நடைபயணமாக சென்ற ராகுல் காந்தி, மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களை கடந்து கடந்த 18 ஆம் தேதி ஆந்திரா சென்றார். தற்போது ஆந்திராவில் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை நடைபெற்று கொண்டிருக்கிறது.

வேட்டி அணிந்த படி ராகுல் காந்தி
தனது ஜோடோ யாத்திரைக்கு இடையே இன்று ஆந்திராவின் மந்திராலயம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்திற்கு ராகுல் காந்தி சென்றார். ராகுல் காந்தி வேஷ்டி அணிந்தபடி பாரம்பரிய உடையுடன் மடத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் இன்று வேகமாக பரவி வருகின்றன. பாரம்பரிய உடை அணிந்தபடி மடத்தில் சாமி தரிசனம் ராகுல் காந்தி மேற்கொண்டார். முன்னதாக மந்திராலயத்தில் ஸ்ரீ சுபுதேந்திர தீர்த்த சுவாமிகளையும் மடத்தில் ராகுல் காந்தி சந்தித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக தெலுங்கானா
ஆந்திராவில் கடந்த 6 தினங்களாக ராகுல் காந்தி மேற்கொண்டு இருந்த பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு பெறுள்ளது. ஆந்திராவில் 96 கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தியின் பாத யாத்திரை நடைபெற்றது. ராகுல் காந்தி பாதயாத்திரையாக இன்று மீண்டும் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் செல்கிறார். ராய்சுசூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இந்த யாத்திரை நடைபெறுகிறது. அதன்பிறகு வரும் 23 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்திற்கு ராகுல் காந்தி பாதயாத்திரையாக செல்கிறார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
ஜூன் 5க்குள் நான் வரலைனா போலீசுக்கு போயிடு! காதலனுக்கு வந்த வீடியோ.. காட்டித் தந்த ஆந்திரா சக்தி ஆப் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications