ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இதை" மட்டும் சாப்பிடுங்க.. ஆண்மை பெருகும், ஆஸ்துமா நீங்கும்.. திரளும் கூட்டம்.. ஆந்திராவில் பரபரப்பு

கழுதைக்கறியை சாப்பிட்டால் ஆஸ்த்துமா நீங்கும் என்ற மூடநம்பிக்கை பெருகி வருகிறது

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: கடந்த ஒரு மாத காலமாக இதுகுறித்த தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், மீண்டும் ஒரு புரளி ஆந்திர மாநில மக்களை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை கறியை விரும்பி சாப்பிடுகிறார்கள்.. இதற்கு அரசு தடையை விதித்த போதிலும்கூட, கழுதைக்கறிக்கான மவுசு அங்கு குறையவில்லை.

சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து, அதை கொன்று, கழுதைக்கறியை விற்பனை செய்து வருகின்றனர்.. இதற்கு சில காரணங்களையும் அம்மக்கள் சொல்கிறார்கள்.

 1 kg கறி

1 kg கறி

கழுதை கறி சாப்பிட்டால், உடல் வலிமைப்பெறும் என்றும், சுவாச பிரச்சனைகளை இது குணப்படுத்த முடியும் என்றும் நம்புகிறார்கள்.. முக்கியமாக ஆண்மை சக்தியை அதிகரிக்கும் என்ற பேச்சு வலுவாக உள்ளது.. அதனாலேயே, இந்த கழுதைக்கறிக்கு டிமாண்டு அதிகம்.. கழுதை வெட்டப்படும் இடங்களிலேயே, இந்த கறியை வாங்க போட்டி போடுவார்களாம்.. பெரும் தள்ளுமுள்ளுக்கிடையில்தான், போட்டுக் கொண்டு கறி வாங்கி போவார்களாம்.. ஒரு கிலோ கறி ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கழுதைக்கறி

கழுதைக்கறி

இந்த கறிக்காக, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து கழுதைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன... ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில், கழுதைக்கறிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்கிறார்கள்.. கடந்த மாதமே இந்த கடைகள் குறித்து விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்கள்.. போலீசாரும், அந்த புகாரின் பேரில் பாபட்லா மாவட்டத்தில் 4 இடங்களில் சோதனை நடத்தினர்.. அப்போது, கழுதைகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில், அதன் கறிகளை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பதை நேரடியாக கண்டனர்.

 பறிமுதல்

பறிமுதல்

இதையடுத்து, கறி விற்பனை செய்து கொண்டிருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்... மொத்தம் 400 கிலோ கழுதைக்கறியும் பறிமுதல் செய்யப்பட்டது... இந்த இடத்தைதவிர, உசிலிப்பேட்டையில் 2 இடங்களிலும், வேடபாலத்தில் ஒரு இடத்திலும், சிராலா ஒரு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களிலும் சோதனைகள் அடுத்தடுத்து நடந்தன.. கைதானவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது..

 புது புரளி

புது புரளி

இந்நிலையில், இன்னொரு புரளி கிளம்பி உள்ளது.. இதை சாப்பிட்டால், ஆண்மைச்சக்தியை அதிகரிக்கும், முதுகுவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நல்லதொரு நிவாரணம் தரும் என்று சொல்லி வரும் நிலையில், மூட்டு வலியும் குணமாகும் என்ற தகவல் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. இதனால், மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் கழுதை இறைச்சியை வாங்கி சமைத்து சாப்பிடவும் துவங்கிவிட்டனர். இதனால், கழுதை இறைச்சி விற்பனை மேலும் அதிகரித்து விட்டது. எனவே, குண்டூர் ஓங்கோல் பாபட்லா பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.,

 கழுதை மாமிசம்

கழுதை மாமிசம்

ஆந்திர வியாபாரிகள் கழுதைகள் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா பகுதியிலிருந்து கழுதைகளை கடத்தி வருகிறார்களாம்.. ஆனால், இது சட்டப்படி குற்றம் என்கிறார்கள். கழுதைகளை வெட்டி அறுப்பது சட்டத்தை மீறும் செயல் என்பதால், எப்படியும், இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.. உணவுப் பாதுகாப்புச் சட்டபடி, கழுதை இறைச்சி சாப்பிடுவதும் சட்டவிரோதமானதுதான்.. அதனால், யாரும் கழுதைக்கறியை வாங்கி சாப்பிட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

 ஆண்மை பெருகும்

ஆண்மை பெருகும்

கழுதை கறியை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கை காரணமாகவே, இவர்கள் இந்த கறியை சாப்பிட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.. தற்போதெல்லாம் நாட்டில் கழுதைகளின் எண்ணிக்கை மிகவும் குறைத்து வருகிறது... தமிழகத்தில், கடந்த 2007-ல் 4,775 ஆக இருந்த கழுதைகள் எண்ணிக்கை, இப்போது வெறும் 1,400-க்கும் கீழ் வந்துவிட்டது. அழிவுக்குள்ளான உயிரினங்கள் லிஸ்ட்டில் கழுதையும் சேர்ந்துவிட்டது பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. வழக்கமாக, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்பார்கள்.. ஆனால், இங்கு "கழுதையே தேய்ந்து கொண்டு வருவது" அதிர்ச்சியும் வேதனையையும் தந்து வருகிறது

English summary
Superstition: steel like body asthma cure donkey meat and high demand as superstition grips andhra pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X